ஒருதடவ சொன்ன கேக்காம திரும்ப திரும்ப தப்பு பண்றனு சொல்லி நடுரோட்ல கத்தியால் குத்தி கொலை செய்த இளம்பெண் !…. பதறவைக்கும் சம்பவம் ….

பெண் ரவுடிகள் முளைத்திடுச்சி ஜாக்கரதாய இருங்க பசங்கள !… கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் தோழியை கத்தியால் கழுத்தை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கொடுங்கையூர் வேம்புலியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முனியம்மாள். நுங்கம்பாக்கம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் ப்ரியா. இருவரும் தோழிகள், அதனால் முனியம்மாள் வீட்டுக்கு ப்ரியா அடிக்கடி வந்துள்ளார். அப்போது முனியம்மாளின் கணவர் கார்த்திக்குடன் ப்ரியாவுக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த முனியம்மாள் தனது கணவர் உடனான பழக்கத்தை கைவிடுமாறு கண்டித்துள்ளார். ஆனால் இருவரும் அடிக்கடி சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.   முனியம்மாளும், ப்ரியாவும் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது முனியம்மாள், ‘என் கணவருடன் நீ பேசாதே, பழகாதே என நான் பலமுறை கண்டித்துவிட்டேன். ஆனால் நீ கேட்காமல் தொடர்ந்து பழகி வருகிறாய்.  வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. நீ உயிருடன் இருந்தால் தானே பேசுவாய்’ என தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ப்ரியாவின் கழுத்தை அறுத்துள்ளார்.

ப்ரியா ரத்த வெள்ளத்தில் கதறி துடித்துள்ளார். இதனைப் பார்த்த போலீசார் உடனே முனியம்மாளை மடக்கி பிடித்துள்ளனர். மேலும் பலத்த காயமடைந்த ப்ரியாவை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  கொலை செய்ய முயன்ற வழக்கில் முனியம்மாளை போலீசார் கைது செய்துள்ளனர். மக்கள் அதிகம் இருக்கும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பெண் கத்தியால் கழுத்து அறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.