காமெடி நடிகர் ஈரோடு மகேஷின் மனைவி தொகுப்பாளினியா? இணையத்தில் பரவி வரும் மனைவி மற்றும் மகள் புகைப்படம்..!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் மேடை காமெடி நாயகனாக அறிமுகமானவர் தான் ஈரோடு மகேஷ். இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார்.அதன் பின்னர், நிகழ்ச்சி தொகுப்பாளர், நடுவர், நடிகர் என பல நிகழ்ச்சிகளின் மூலம் திறமையை நிரூபித்து வந்தார். இதனைத்தொடர்ந்து, இவரின் மனைவி ஸ்ரீதேவி, சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக இருந்தவர்.

இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு அமிழ்தா என்ற மகளும் உள்ளது.இந்நிலையில் ஈரோடு மகேஷ் தற்போது சின்னத்திரையில் கலக்கி வருகிறார். சமீபத்தில் ஈரோடு மகேஷ் தனது மகள் மற்றும் மனைவியுடன் விஜய் டிவி செட்டிற்கு வந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.