லண்டனில் அதிகாலையில் வீடுகள் குலுங்கியது அதிபயங்கர சப்தத்தால் !…. அந்த நேரம் நடந்தது என்ன? பொலிசார் வெளியிட்ட தகவல்…


விச்சிரஉணர்வு ஏற்பட்டது லண்டன் மக்கள் இடையில், அதிபயங்கர சத்தம் ஒலித்தது அதிகாலையில் , லண்டனில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதன் காரணமாக வீடு குலுங்கியதாக மக்கள் பீதியடைந்த நிலையில், அதற்கு என்ன காரணம் என்பது குறித்து பொலிசார் விளக்கமளித்துள்ளனர். பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் அதிகாலையில் உள்ளூர் நேரப்படி சரியாக 4.17 மணி முதல் 4.20 மணிக்குள் பயங்கர வெடிச்சத்தம் ஒன்று கேட்டதால் தங்களது வீடுகள் குலுங்கின , சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் அந்த பயங்கர வெடிச்சத்ததின் காரணமாக அதிர்ச்சியில் கண்விழித்தனர். ஒரு சிலர் இது வெடிகுண்டா என்று அச்சத்தில் தங்கள் டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி வந்தனர்.

விசாரணை மேற்கொண்டு வருவதாக Herts Fire Control தெரிவித்திருந்தது.இந்நிலையில் அந்த நேரத்தின் போது இரண்டு RAF விமானங்கள் பறந்ததாகவும், அந்த விமானம் பறக்கும் போது, காற்றை கிழித்து கொண்டு அதிவேகமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு 1,236 கி.மீற்றர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டதால், இப்படி ஒரு சத்தம் கேட்டதாகவும் மற்றபடி எந்த ஒரு பயமும் வேண்டாம் என்று மக்களுக்கு பொலிசார் தெரிவித்துள்ளனர்.மேலும் இணையவாசிகள் பலரும் அதிகாலையில் அந்த பயங்கர சத்ததின் வீடியோவை சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.