காதலியின் பிறந்த நாளன்று காதலை உறுதி செய்த பிக் பாஸ் முகென் ராவ்!…. என்ன செய்துள்ளார்னு பாருங்கள்!…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை தட்டிச் சென்றவர் மலேசியாவைச் சேர்ந்த முகேன் ராவ். சிறுவயதிலிருந்தே முகேன் பல கஷ்டங்களை சந்தித்து வந்ததால் பெரிதாக எந்தஒரு சந்தோஷத்தையும் அனுபவிச்சது இல்லை என்று பலமுறை கூறிவுள்ளார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெற்றி மகனாக வெளியே வந்த அவருக்கு இந்தியா மட்டுமல்ல மலேசியா ரசிகர்கள் என அவரை அன்பு மழையினால் நனைய வைத்தனர். முகேன் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் பொழுது அபிராமி அவரைக் காதலித்து வந்தார்.

ஆனால் ஏற்கெனவே வேறொரு பெண்ணை காதலிப்பதால் முகேன் அபியை தோழியாகவே பார்த்து வந்தார். பின்பு வெளியில் வந்த பின்பு தனது காதல் குறித்து எதுவும் கூறாமல் இருந்து வந்தார் முகேன்.

Muken

நதியா என்ற பெண்ணைக் காதலிக்கிறார் என்று நினைத்த தருணத்தில், நதியா வேறொரு நபருடன் நெருக்கமாக இருந்த புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இதுகுறித்தும் முகேன் எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை.

இந்நிலையில் முகேன் நதியாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டதுடன் அவரை வாழ்த்தவும் செய்துள்ளார். இவர்கள் மஞ்சள் நிற உடையில் இணைந்துள்ள புகைப்படத்தினை வைத்து நதியா, முகேனின் காதல் உறுதியாகியுள்ளது என்று ரசிகர்கள் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் கருத்துக்களை பதிவிட்டு தெரிக்க வைத்துள்ளனர்.