விக்னேஷ் சிவனுடன் பார்ட்டியில் மேஜிக் காட்டிய நயன்தாரா !…. வைரலாகும் வீடியோ கட்சி …கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!…

நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டு பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் அவர் அசைவ உணவு சுமக்கும் இடத்தில மாஜிக் செய்வது போன்று தன காதலன் விக்னேஷ்சிவனுடன் விளையாடி கொண்டு இருந்த கட்சி சோசியல் வலைத்தளங்களில் பரவி வருகிறது . கடந்த மாதம் 18ம் தேதி தனது பிறந்தநாளை விக்னேஷ் சிவனுடன் வெளிநாட்டில் கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படத்தினை விக்னேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அப்புகைப்படம் பலரின் வாழ்த்துக்களையும் பெற்றது.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாக உள்ள மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பு துவக்க விழா, சமீபத்தில் கன்னியாகுமரியில் நடைபெற்றது. இந்த படத்தின் துவக்க விழாவில் கலந்துகொள்ளாத நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவன் உடன் ‘நான்வெஜ் உணவு பார்ட்டியில்’ கலந்துகொண்டுள்ளார். இதில் மேஜிக் வேற செய்துள்ளார்.

குறித்த காணொளி தற்போது தீயாய் பரவி வருகின்றது. ஆனால் குறித்த காணொளி பிறந்தநாளுக்கு வெளிநாட்டிற்கு சென்ற போது எடுத்துள்ளனர் என்றும் கூறி வருகின்றனர். மூக்குத்தி அம்மன் திரைப்படத்திற்காக விரதம் இருந்து நடிக்கவுள்ளதாக கூறியிருந்தீர்களே? இதுதான் அந்த விரதமா என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.