சற்றுமுன் போலீசார் வெளியிட்ட பகீர் தகவல்..!இரவு நேரத்தில் கொலையாளிக்கு போன் செய்த பிரியங்கா ரெட்டி ?..

சற்றுமுன் காவல்துறை வெளியிட அதிர்ச்சி தகவல் ,கடந்த இரு தினங்களுக்கு முன் ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே அதிர வைத்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பாக, குற்றவாளிகளான முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்ன கேசவலு ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பாக, பொலிசார் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் சமயத்தில் பொலிசார் தற்போது திடுக்கிடும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அதில், பிரியங்கா மாலை டோல்கேட் அருகே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தும்போதே, அவரை வன்கொடுமை செய்வதற்காக, குறித்த நால்வரும் நோட்டமிட்டுள்ளனர்.

பின்னர், மது அருந்திய நால்வரில் லாரி டிரைவரான ஆரிப் தனது லாரி க்ளீனரை அனுப்பி, இருசக்கர வாகனத்தை பஞ்சராக்குமாறு கூறியுள்ளார்.இரவு பிரியங்கா வந்து இருசக்கர வாகனத்தை எடுத்த போது, ஆரிப் தானாக முன்வந்து உங்களது வண்டி பஞ்சர் ஆகியுள்ளது. நான் உதவுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.இதனால், பதற்றமடைந்த பிரியங்கா சற்று யோசனை செய்யவே, உடனடியாக, தன்னை நல்லவன் போல் காட்டிக்கொள்ள தனது போன் நம்பரை கொடுத்துள்ளார்.

அதன் பின்பு, அவர்களை நம்பிய பிரியங்கா, தனது இருசக்கர வாகனத்தை அவர்களிடம் கொடுத்துள்ளார்.சிவா என்பவன், இருசக்கர வாகனத்தை பஞ்சர் சரிசெய்வதற்காக, எடுத்துச் செல்ல, நீண்ட நேரமாகியும் சிவா வராத நிலையில் பிரியங்கா தனது செல்போனில் இருந்து ஆரிப்பை அழைத்துள்ளார்.அப்போது, திடீரென்று சின்ன கேசவன் மற்றும் நவீனுடன் அங்கு சென்று ஆரிப், பிரியங்காவை தாக்கி அருகே உள்ள காம்பவுண்ட் சுவர் பக்கம் அழைத்துச் சென்றுள்ளான்.

பிரியங்காவின் செல்போனில் இருந்து சென்ற அந்த அழைப்பு தான் ஆரிப்பை போலீசுக்கு அடையாளம் காட்ட உதவியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.மேலும் டூ வீலரை ஆரிப் கொண்டு வராத நிலையில், அவனுக்கு பிரியங்கா செல்போனில் அழைத்த அழைப்பு தான் குற்றவாளிகள் சிக்கவும் காரணமாகியுள்ளது.