சூதாட்ட புகாரில் சிக்கிய பிரபல நடிகை ராதிகாவின் மருமகன்! போலீசில் புகார் பதிவுசெய்யப்பட்டது ?….

பிரபல கிரிக்கெட்வீரர்அபிமன்யுவின் மீது சூதாட்ட புகார் எழும்பியுள்ளது தற்பொழுது நடக்க இருக்கும்T20 மேட்சில் . பிரபல கிரிக்கெட் வீரரும், நடிகை ராதிகாவின் மருமகனுமான அபிமன்யு மிதுன் மீதான சூதாட்ட புகார் குறித்து குற்றப்பிரிவு பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கர்நாடகாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த பிரிமீயர் லீக் டி20 போட்டியில் வீரர்கள் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

கர்நாடகா பொலிசார் தீவிர விசாரணை நடத்தியதில் ஜிஎம் கவுதம், அப்ரார் காஸி உட்பட 8 பேரை கைது செய்தனர். சிவமோகா அணியின் கேப்டனாக இருந்த அபிமன்யு மிதுனுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக புகார் எழுந்த நிலையில், பெட்டிங் மற்றும் ஸ்பாட் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டு குறித்து பதிலளிக்க விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

விசாரணையில் சூதாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால், அவர் கைது செய்யப்படாலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிரபல நடிகை ராதிகா சரத்குமாரின் மருமகனான அபிமன்யு மிதுன், இந்திய அணிக்காக 9 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார், மத்திய குற்றப்பிரிவு பொலிசார் கிரிக்கெட் வீரரை விசாரிப்பது இதுவே முதன்முறையாகும்.