‘ஆடையின்றி புதருக்குள் கிடந்த’ 2ம் வகுப்பு மாணவி.. ரத்த கரை கைலியால் விபரீதம்.. ’55 வயது முதியவரால் நடந்த கொடூரம்’…??

கர்நாடகாவில் குடிகாரன் ஒருவன் சாக்லேட் தருவதாகக் கூறி 8 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகா மாநிலம் கல்புர்கி அருகே யாகாபுரம் கிராமத்தை சேர்ந்த 2ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி காணாமல் போயுள்ளார். இதனால் குழந்தையின் பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒரு புதரில் குழந்தையின் ஆடை இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே அங்கே சென்ற போலீசார் தீவிரமாக தேடியுள்ளனர்.

அப்போது ஒரு புதருக்குள் சிறுமி சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதனை அடுத்து பிரேத பரிசோதனைக்காக சிறுமியை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். மேலும் சிறுமி சடலமாக கிடந்த இடத்தில் ஆணின் உள்ளாடை கிடந்ததை கண்டுபிடித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ளவர்களிடம் போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த எல்லப்பா என்பவருடன் சிறுமி சென்றதாக சிலர் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து உடனடியாக எல்லப்பாவின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அங்கு ரத்தம் படிந்த உடையுடன் மதுபோதையில் அவர் இருந்துள்ளார். இதனை அடுத்து எல்லப்பாவை கைது செய்த போலீசார், அவரிடம் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், பள்ளிக்கு சென்ற சிறுமியிடம் சாக்லேட் தருவதாக கூறி எல்லப்பா அழைத்து சென்றுள்ளார். பின்னர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.மாலை நீண்ட நேரமாகியும் குழந்தை வீடு திரும்பாததால் பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்துள்ளனர்.

ஆனால் சிறுமி பள்ளிக்கு வரவில்லை என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து குழந்தையை காணவில்லை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 8 வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டது.