இறந்த பெண் மருத்துவர் குறித்து ‘ஆபாச’ பதிவு செய்த 23 வயது இளைஞன் !.. பெண்களை வன்புணர்வு செய்யவேண்டும் ..? அவதூர்வாக பேசி பரபரப்பு!…

பெண் உயிரோடு இருக்கும் போது வன்புணர்வு செய்து கொன்று விட்டது போதாது என்று இறந்த பின்பும் அவளது புகைப்படத்தை தவறாக பயன்படுத்தும் இளைஞன் !…..இறந்த பெண் மருத்துவர் குறித்து பேஸ்புக்கில் ஆபாசமாக பதிவிட்ட 23 வயது இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.ஹைதராபாத்தை சேர்ந்த பெண் மருத்துவர் மரணம் தொடர்பாக குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டுமென இதுவரை சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் கையெழுத்து போட்டுள்ளனர். இதுதொடர்பாக நாடு முழுவதும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்தநிலையில் இறந்த பெண் மருத்துவர் குறித்து 23 வயது இளைஞர் ஒருவர் ஆபாசமாக பேஸ்புக்கில் பதிவிட அது பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதில்,” பெண்கள் வெளியில் சென்றால் நாங்கள் அவர்களை வன்புணர்வு செய்யக்கூடாதா? எல்லா பெண்களும் இதுபோல வன்புணர்வு செய்யப்பட வேண்டும்,” என மிகவும் மோசமாக தெரிவித்து இருந்தார்.இதைத்தொடர்ந்து ஹைதராபாத் போலீசார் அந்த வாலிபர் குறித்த தகவல்களை பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து பெற்று, அந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞரின் பெயர் சவான் பிரகாஷ் என்பதும், நிஜாமாபாத்தின் பகிராபாத் பகுதியை சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது அந்த இளைஞரை கைது செய்து போலீசார் அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.