பிரியங்காவின் அஸ்தியை கண்ணீருடன் கரைத்த பெற்றோர்! சிறையில் உள்ள கொடூரன்களை சந்திக்க வந்தவர்கள் யார் ?….

ஹைதராபாத்தை சேர்ந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி (26) பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.பின்னர் அவர் உடலை கொடூரன்கள் பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இந்த வழக்கில் முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்ன கேசவலு ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டனர். பிரியங்காவின் உடல் தகனம் செய்யப்பட்ட பின்னர் அதன் அஸ்தி குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.அந்த அஸ்தியை குடும்பத்தார் நேற்று கனத்த மனதுடன் கொண்டு போய் கரைத்து விட்டு வீடு திரும்பினர்.

பிரியங்காவின் பெற்றோர் ஒரு காலனியில் வசிக்கும் நிலையில் அங்கு பல வீடுகள் உள்ளது.அங்குள்ளவர்கள் எல்லோரும் சேர்ந்து மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி பிரியங்காவுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினர்.பிரியங்கா இருந்த காலனியின் வாயில் அருகில் அம்மன் கோவில் ஒன்று உள்ளது.அந்த கோவிலை பராமரிக்கும் ஷிவ்ராஜ் என்பவர் கூறுகையில், பிரியங்கா தினமும் இந்த கோவில் வாசலில் ஒரு நிமிடம் நின்று பிரார்த்தனை செய்துவிட்டு தான் வெளியில் செல்வார் என சோகத்துடன் கூறினார்.இதனிடையில் வழக்கில் கைதான கொடூரன்கள் செர்லபலி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.அங்கு இதுவரை யாரும் வந்து அவர்களை பார்க்கவில்லை. அந்த சிறையில் உள்ள தனியறையில் நால்வரும் அடைக்கப்பட்டுள்ளனர்.

பொதுவாக தீவிரவாத வழக்குகளில் சிக்குபவர்கள் தான் அந்த அறையில் அடைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் செய்த இந்த கொடூர செயலினால் இவர்களை அந்த சிறையில் அடைத்து உள்ளனர் . இந்த நால்வருக்கும் இந்திய அரசு ஒரு மிகப்பெரிய அளவில் தண்டனை வழங்க வேண்டும் என்று பொது மக்களின் கோரிக்கையாகும் .பிரியங்கா ரெட்டியின் அஸ்தியை அவர் குடும்பத்தார் கண்ணீருடன் கரைத்து விட்டு கனத்த மனதுடன் வீடு திரும்பினார்கள். இந்த ப்ரியங்காவின் குடும்பத்திற்காகவாவது இரக்கப்பட்டு அந்த நால்வருக்கும் சரியான தண்டனை அளிக்க வேண்டும்.