ஆட்டோவை மோதி இழுத்துச்சென்ற’ டிரக்!…. ஆசிரியை நேர்ந்த பரிதாபம் ?…டிரைவர் படுகாயம்.. ‘பதறவைக்கும்’ சிசிடிவி காட்சிகள்!

ஆட்டோவில் சென்ற பெண் ஆசிரியை டிரக், ஆட்டோ மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த வாரம் ஹைதராபாத்தில் அரசுப்பேருந்து மோதி தனியார் பெண் ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல நடந்து சென்ற பெண்மீது மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்த கார் மோதி, அந்த பெண்ணும் அதே இடத்தில் உயிரிழந்தார்.அதே வாரத்தில் ஸ்கூட்டியில் சென்ற பெண் ஆசிரியை ஒருவரை லாரி மோதி இழுத்து சென்றது. அந்த ஆசிரியை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த வகையில் கடந்த ஞாயிறன்று ஆட்டோவில் சென்ற பெண் ஆசிரியை டிரக், ஆட்டோ மீது மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார். கேந்திரிய வித்யாலாயா பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் சைலஜா ராவ் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆட்டோவில் சென்றுள்ளார்.

அப்போது எதிரே வந்த டிரக்கின் டிரைவர் வேறு ஆட்டோவில் மோதி விடாமல் டிரக்கை திருப்பியபோது ஆசிரியை சென்ற ஆட்டோ மீது மோதிவிட்டார். மோதியதுடன் நில்லாமல் ஆட்டோவை, டிரக் சிறிது தூரம் இழுத்துச்சென்றது. இதில் ஆட்டோ டிரைவர் பலத்த காயங்களுடன் ரோட்டில் விழுந்தார். ஆசிரியை சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார்.டிரைவர் கீழே விழுவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை தூக்கிச்சென்று அருகில் இருந்து மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.