கண்ணாடி தொட்டிக்குள் 9 வயது சிறுமி…! உலகத்தையே திரும்பி பார்க்கவைத்த விருதுநகர் சிறுமி

9 வயது சிறுமி நம் நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக ஒரு அதிசயத்தை நிகழ்த்தியுள்ளாள். பள்ளி மாணவி மீன் தொட்டில் 8 நிமிடம் தொடர்ந்து யோகாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.விருதுநகர் மாவட்டம் சூலக்கரையை சேர்ந்தவர்கள் கோவிந்தராஜ்-பார்வதி தம்பதி. இவர்களது மகள் முஜிதா (9). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.

யோகா கற்று வரும் முஜிதா, பல்வேறு போட்டிகளில் கலந்து பாராட்டுக்களை பெற்று வருகிறார்.இந்நிலையில் 21 அங்குலம் அகலம் கொண்ட சிறிய மீன் தொட்டியில் 8 நிமிடம் கண்டபெருண்டாசன யோகாசனம் செய்து வேர்ல்ட் புக் ஆஃப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர் 2012-ம் ஆண்டு வெளிநாட்டில் ஒருவர் 3 நிமிடம் இதுபோன்று யோகாசனம் செய்ததே சாதனையாக இருந்தது. இதனை சிறுமி முஜிதா முறியடித்துள்ளார். இந்நிலையில் மிகவும் கடினமான யோகாசனத்தை அசாதாரணமாக செய்து சாதனை படைத்த முஜிதாவுக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.