‘ஷூ-வுக்குள் இருந்த ஆபத்து’…’சென்னை’யில் உயிருக்கு போராடும் பெண்! அதிர்ச்சியில் கணவர்….

ஷூவிற்குள் இருந்த பாம்பு கடித்ததால் தீவிர சிகிச்சையில் பெண் அனுமதிக்க பட்டர். ஷூ-வை சுத்தம் செய்தபோது அதற்குள் இருந்த பாம்பு, பெண்ணை கடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை கே.கே.நகரை அடுத்த கன்னிகாபுரம் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பழனி. கார்பெண்டராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சுமித்ரா. இவர் நேற்று இரவு வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டில் ஒரு ஓரத்தில் கிடந்த செருப்பு மற்றும் ஷூவை எடுத்து சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஷூவில் பதுங்கியிருந்த பாம்பு சுமித்திராவை கையில் கடித்துள்ளது.

இதனை சற்றும் எதிர்பாராத அவர், அதிர்ச்சியில் கூச்சல் போட்டுள்ளார். சுமித்திராவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளார்கள்.

ஷூவை பயன்படுத்தும் முன்பு, அதற்குள் கைவிட்டு பார்க்காமல் கீழே தட்டி பார்த்து விட்டு அணிவதே பாதுகாப்பானதாகும். தற்போது மழை காலம் என்பதால் அதிக கவனமுடன் இருக்க வேண்டியது நமது கடமை. மேலும் பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு ஷூ அணிவிப்பதற்கு முன்பு நிச்சயம் கவனமுடன் இதை செய்ய வேண்டும்.