அக்காக்கள் தனது 2 வயது தம்பி கொன்றனர் …?நடந்த கொடூரம்.. ‘டிவி நிகழ்ச்சி’… ஐடியா கிடைத்ததாக ‘பகீர்’ வாக்குமூலம்’..

டிவி நிகழ்ச்சியை பார்த்து தனது தம்பியை கொன்ற அக்காக்கள் ….2 வயது தம்பியைக் கொலை செய்த மைனர் சிறுமிகள் டிவி நிகழ்ச்சியைப் பார்த்துதான் அதற்கான யோசனை தோன்றியதாக பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.ஹரித்வாரைச் சேர்ந்த 14 மற்றும் 13 வயதுடைய சகோதரிகள் இருவர் தங்கள் பெற்றோர் வேலைக்குச் சென்ற பிறகு 2 வயது தம்பியைப் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பால் எரிச்சலடைந்துள்ளனர். அதனால் தங்களுடைய தம்பியைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். அப்போது அதில் மூத்த சகோதரி தான் பார்த்த டிவி நிகழ்ச்சி ஒன்றில் வருவதைப் போல கொலை செய்யலாம் எனக் கூறியுள்ளார்.

அதன்படி தங்களுடைய சகோதரர் ஒருவருடைய தூக்க மாத்திரைகளைத் திருடி முதலில் குழந்தைக்கு கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளனர். பின்னர் குழந்தையை ஒரு பையில் போட்டுக்கொண்டு சென்று அருகிலுள்ள கங்கையில் மூழ்கடித்துக் கொலை செய்துள்ளனர். அதன்பிறகு 20 நிமிடங்கள் கழித்து எதுவும் தெரியாதது போல அவர்கள் வீடு திரும்பியுள்ளனர்.இதையடுத்து குழந்தையைக் காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போதும் சிறுமிகள் தனது தாய்க்கும், அத்தை ஒருவருக்கும் இருந்த விரோதத்தை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்டு அவர்மீது பழிபோட முயற்சித்துள்ளனர்.

பின்னர் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியதும் தங்களுடைய தம்பியைக் கொலை செய்ததை இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றின் மூலமாக தான் இந்த யோசனை தோன்றியதாகக் கூறியுள்ளனர். மேலும் சமீபத்தில் இதுபோலவே பெண் ஒருவர் தனது குழந்தையை கங்கையில் மூழ்கடித்துக் கொன்றதை அறிந்த அவர்கள் இதுவே கொலை செய்ய எளிமையான வழி என நினைத்து செய்ததாகவும் கூறியுள்ளனர்.