ஸ்கூலில் சக மாணவர்கள் கிண்டல்..? ஆத்திரமடைந்த தாய் தன் இருபிள்ளைகளை “தூக்கிட்டு கொலை” செய்த கொடூரம்…!!

குழந்தைகள் மரணத்திற்கு தாயே காரணம்… தூக்கிட்டு கொன்ற கொடூர தாய் கைது செய்த போலீஸ் பதற வைக்கும் வாக்குமூலம்..! அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் சொந்த பிள்ளைகள் இருவரையும் ஒரே கயிறில் தூக்கிட்டு கொன்ற கொடூர தாயாரை போலீசார் கைது செய்துள்ளனர்.பென்சில்வேனியா மாகாணத்தின் அல்பானி டவுன்ஷிப் பகுதியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக 36 வயதான லிசா ஸ்னைடர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.தாயாரே சொந்த பிள்ளைகளை தூக்கிட்டு கொல்ல காரணம் என்ன என்பது தொடர்பில் போலீசார் எந்த தகவலையும் வெளியிடவில்லை.கடந்த செப்டம்பர் 23 ஆம் திகதி பொலிசாருக்கு தகவல் தெரிவித்த லிசா ஸ்னைடர், பிள்ளைகள் இரண்டும் தூக்கில் தொங்குவதாக குறிப்பிட்டுள்ளார்.தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் 8 மற்றும் 4 வயதுள்ள இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.

இருவரும் மரணமடைந்ததாக மருத்துவமனை வட்டாரம் தகவல் வெளியிட்டது. 8 வயதான சிறுவன், பாடசாலையில் கிண்டலுக்கு இரையாகி வந்துள்ளதாகவும்,இதில் 4 வயது சிறுமி தமது சகோதரருக்கு ஆதரவாக இருந்ததாகவும், இதுவே இருவரின் மரணத்திற்கும் காரணம் என லிசா போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் உடற்கூராய்வில் அது கொலை என தெரியவந்தது. தொடர்ந்து லிசா போலீசார் சாரால் கைது செய்யப்பட்டார்.பிள்ளைகள் இருவரது மரணத்திற்கு முன்னர், லிசா தூக்கிட்டு கொலை செய்வது உள்ளிட்டவைகள் தொடர்பில் இணையத்தில் தேடியதாக போலீசார் கண்டறிந்துள்ளனர்.