‘சென்னையில் புதிய வழித்தடம் இன்று’..! இரும்பு பெண்மணி ஜெயலலிதா நினைவுத்யொட்டி…?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவுத் தினத்தையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அவரத நினைவிடத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் சார்பில் அஞ்சலி செலுத்துவதற்காக, வியாழக்கிழமை காலையில் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் ஊர்வலமாக செல்ல உள்ளனர்.

இதனை முன்னிட்டு காமராஜர் சாலை மற்றும் வாலாஜா சாலையில் சூழ்நிலைக்கு தக்கவாறு வாகனங்கள் அனுமதிக்கப்படாது. மேலும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,


1. வடக்கிலிருந்து வரும் வாகனங்கள் போர் நினைவு சின்னம் சந்திப்பில் திருப்பப்பட்டு, கொடிமரச் சாலை, அண்ணா சாலை வழியாக செல்லலாம்.
2. முத்துச்சாமி பாயிண்டிலிருந்து வரும் வாகனங்கள், கொடிமரச் சாலைக்கு செல்லாமல், வாலாஜா சாலையில் திருப்பப்பட்டு, அண்ணா சாலை வழியாக செல்லலாம்.

3. நேப்பியர் பாலத்திலிருந்து வரும் வாகனங்கள், ஆடம்ஸ் பாயிண்ட்டில் திருப்பப்பட்டு, சுவாமி சிவானந்தா சாலை வழியாக செல்லலாம்.

4. அண்ணா சாலை வழியாக செல்லும் வாகனங்கள், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் வாலாஜா சாலை ஆகியவற்றில் செல்ல அனுமதிக்காமல், நேருக்கு நேராக அண்ணா சாலையில் சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

5. விவேகானந்தர் இல்லம் சந்திப்பில் இருந்து வரும் வாகனங்கள், கண்ணகி சிலை சந்திப்பில் திருப்பப்பட்டு, பாரதி சாலை, ராயப்பேட்டை மணிக்கூண்டு வழியாக செல்லலாம்.

6. தெற்கில் இருந்து வரும் வாகனங்கள் காந்தி சிலை சந்திப்பில் திருப்பப்பட்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக செல்லலாம் என்று தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.