திருமணத்திற்கு பெண், மற்றும் மாப்பிளை தேடுபவரா நீங்கள்..? இதை மட்டும் “கணித்தால்” போதும் திருமணத்திற்கு பின் உங்க அடிமையாகிவிடுவார்கள்..!!

ஜோதிடத்தில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகள் உள்ளன. லக்னத்தை அடிப்படையாக வைத்து ஒன்று முதல் 12 வரை பாவங்கள் எனப்படும் வீடுகள் குறிக்கப்படுகின்றன. ஜாதகத்தில் 12ஆம் இடம் பெண் இன்பம், தாம்பத்ய உறவு சுகம் தரும் பாவம் ஆகும். நல்ல தூக்கம் மன அமைதியை தரும் தாம்பத்ய உறவில் உற்சாகத்தை தரும் என்கிறது சமீபத்திய ஆய்வு. தூக்கமும் தாம்பத்ய உறவும் திருப்திகரமாக இருக்கவேண்டும் எனில் ஜாதகத்தில் 12ஆம் வீடு எனப்படும் மோட்ச ஸ்தானத்தில் அமரும் கிரகங்களும், பார்க்கும் கிரகங்களும் மகிழ்ச்சிகரமான தாம்பத்ய வாழ்க்கையை அளிக்கிறது என்கின்றனர் ஜோதிடர்கள்.

தூக்கம் என்பது ஒரு வரம், அதே போல ஒருவருக்கு அமையும் மனைவியை பொருத்து நல்ல தாம்பத்ய வாழ்க்கையும் அமையும். ஒருவருக்கு நல்ல தூக்கம் இருந்தால், துணை உடனான தாம்பத்ய உறவு பற்றிய ஆசை 14 சதவிகிதம் வரை அதிகரிக்கக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மனிதராக பிறந்த ஒருவர் குறைந்தது 7 மணி நேரம் 22 நிமிடங்கள் நிம்மதியாகத் தூங்கினால் அவர்களுக்கு பாலியல் ஆசை அதிகரிக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டுடன், இன்ப துன்பங்களை சமமாக ஏற்று, குடும்பத்தை நல்லவழியில் நடத்திச் செல்வதன் மூலமே அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சி என்பது குடியேறும்.

குரு பார்வை கோடி புண்ணியம். குரு பகவான் தான் இருக்கும் இடங்களிலிருந்து 5, 7, 9 ஆகிய ஸ்தானங்களைப் பார்வை செய்வார். குரு பார்வை பெறும் பாவங்களுக்கு எவ்வளவு தோஷங்கள் இருந்தாலும் அதன் கெடுதிகள் அனைத்தும் விலகி நற்பலன்கள் உண்டாகும். குருவின் பார்வை ஜென்ம லக்னத்திற்கோ, 7ஆம் வீட்டிற்கோ, 7ஆம் அதிபதிக்கோ, சுக்கிரனுக்கோ அமையுமானால் மணவாழ்க்கையானது மிகவும் சிறப்புவாய்ந்ததாக இருக்கும்.12ஆம் வீடு எனப்படும் தாம்பத்ய சுகம் தரும் வீட்டில் அமரும் கிரகங்கள் நன்றாக இருக்கவேண்டும்.

அந்த வீட்டை பார்க்கும் கிரகங்கள் நன்றாக இருந்தால் மட்டுமே படுக்கை அறையில் நிம்மதியாக இருக்கும் இல்லாவிட்டால் ஒயாத சண்டை சச்சரவுகள்தான் விடிய விடிய அரங்கேறும்.பெண்ணின் ஜாதகத்தில் 12ஆம் வீடு சுபருடைய வீடாக இருந்து அங்கே சுப கிரகம் அமர்ந்திருந்தால் அந்த பெண் மாடி வீட்டு அதிபதிக்கு மனைவியாக போகும் அதிர்ஷ்டம் அமையும் மாடி வீட்டில் மகிழ்ச்சியான தாம்பத்ய சுகத்தை அனுபவிப்பார். 12ஆம் வீடு மீனம் இது குருவின் வீடு. இந்த வீட்டில் காம காரகன் சுக்கிரன் உச்சம் பெறுகிறார். புதன் நீச்சம் அடைகிறார். 12ஆம் வீடு குருவின் வீடாக இருந்தால் அந்த ஜாதகருக்கு உறவில் சுகமும் மென்மையும் கிடைக்கும். 12ஆம் வீடு சந்திரன் வீடான கடகமாக இருந்தால் மிதமான உறவினை விரும்புவார்கள்.

அதுவே சுக்கிரனின் வீடான இருந்தால் தாம்பத்ய சுகத்தில் திறமைசாலிகளாகவும் அனைவரும் விரும்பும் வகையிலும் நடந்து கொள்வார்கள்.12ஆம் இடத்தின் அதிபதி பலம் பெறுவது மிக அவசியம். காதல், காம சுகங்கள் இந்த இடம் மூலமாகத்தான் கிடைக்கிறது. இந்த இடத்தில் நீச்ச, பாவ, தீய கிரகங்கள் இல்லாமல் இருப்பது நலம் தரும். இந்த இடத்தை நீச்ச கிரகங்கள், பாவ கிரகங்கள் பார்த்தால் காதல் சிறப்பாக அமையாது. திருமண பொருத்தத்தின்போது ஜாதக பொருத்தம் மிக அவசியம் என்று கூறுகிறார்கள்.

காதல், காமம் போன்ற விஷயங்களில் சந்தர்ப்ப சூழ்நிலைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு ஜாதகத்தில் எவ்வளவு தோஷங்கள் இருந்தாலும் திருமணத்திற்குப் பிறகு வலுவான சுப கிரகத்தின் தசை நடைபெற்றால் மண வாழ்க்கையானது மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். குறிப்பாக குரு, சுக்கிரன் ஆகிய கிரகங்கள் பலமாக இருந்து தசை நடைபெற்றால் வாழ்வில் சந்தோஷத்திற்குக் குறைவிருக்காது.