நீதிமன்றம் சென்ற பெண்ணுக்கு நடந்த கொடூரம்..! பாதி எரிந்த நிலையில் கிடந்த இளம்பெண்’! திடுக்கிடும் வாக்குமூலம்…..

இந்தியாவில் பல இடங்களில் பாலியல் வன்கொடுமை அதிக அளவில் நடந்து வருகிறது.அக்காலத்தில் பெண்களுக்கு தனி உரிமை, மரியாதை இருந்தது. அப்படிப்பட்ட பெண்களுக்கு இந்நிலைமை !.பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் நீதிமன்றம் செல்லும் வழியில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் உன்னாவ் பகுதியை சேர்ந்த இளம்பெண் கடந்த மார்ச் மாதம் அப்பகுதியை சேர்ந்த இரண்டு நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து இரு நபர்களையும் போலீசார் கைது செய்தனர். இதனை அடுத்து ஒருவர் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார். மற்றொருவர் போலீசாரிடமிருந்து தப்பியுள்ளார். அதனால் அவரை தேடப்படும் நபராக காவல் துறை அறிவித்தது.

இந்நிலையில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் விசாரணை தொடர்பாக நீதிமன்றம் சென்றுகொண்டு இருந்துள்ளார். அப்போது அவரை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு தூக்கிச்சென்று பெட்ரோல் ஊற்றி கொளுத்தியுள்ளது. 70 சதவீத தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அப்பெண் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இதனை அடுத்து அப்பெண் கொடுத்த தகவலின் அடிப்படையில் மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்ட நபரும் இருந்ததாக கூறப்படுகிறது. தீ வைத்து கொளுத்தும் முன் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி அடங்காத நிலையில், மற்றொரு பெண்ணும் எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.