வெளிநாட்டில் இருந்து வீடியோ காலில் பேசிய கணவர்..! நெருப்பு ரூபத்தில் வந்த எமன்..? அரங்கேறிய கொடூரம்..!!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சார்ந்த ராஜசேகர் என்பவர் சூடான் நாட்டில் கண்ணாடி தொழிற்சாலையில் வேலை செய்துவருகிறார் தினமும் தன் மனைவி மற்றும் 3 வயது மகளுக்கு போன் செய்து பேசுவது வழக்கமாய் கொண்டிருந்தார்.

அந்தவகையில் வழக்கம் போல தொழிற்சாலை இடைவேளை நேரத்தில் தன் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தார் ராஜசேகர் அப்போது எதிர்பாராத விதமாக நிரப்பி இருந்த பெட்ரோல் டேங்கர் லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

பின்னர் அதில் இருந்து வெடித்து சிதறிய நெருப்பு துகள்கள் தொழிற்சாலை முழுவதும் வெடித்து சிதறியது இந்த கொடூர சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆகவும் தீயில் கருகி தீக்காயங்களுடன் 130-க்கும் அதிகமானோர் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதில் 18 இந்தியர்கள் நெருப்பில் கருகி உயிர் இறந்துள்ளனர் என்ன அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது.