‘மருத்துவர் பிரியங்காவை போல உத்திரபிரதேசத்தில்’..! 5 பேர் சேர்ந்த கும்பல் ‘கொடூர நாசவேலை’ சாம்பலை பார்த்து கதறும் மக்கள்..?

மருத்துவர் ப்ரியங்காவின் கொலை சம்பவம் காட்டு தீ போல் பரவிவரும் நிலையில் புதிதாக இதனை போன்று ஒரு சம்பவம் அரங்கேறிவுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த மார்ச் மாதம் உன்னவ் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை 2 பேறால் வன்புணர்வு செய்யப்பட்டார்,அது குறித்து அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்து வந்தார், புகாரின் பேரில் அந்த இரண்டு நபர்களையும் போலீசார் கைது செய்தனர்.

ஜெயிலில் அடைக்க பட இரண்டு நபரின் ஒருவர் சில தினங்களுக்கு முன்பு ஜாமினில் வெளியே வந்துள்ளார். மற்றொரு நபர் போலீசாரிடம் தப்பியுள்ளார். தப்பித்த மற்றொருவரை போலீசார் தேடிவரும் நிலையில் பாதிக்கப்பட்ட பெண் வழக்கு தொடர்பாக நீதிமன்றம் சென்று உள்ளார். அப்போது அங்கு வந்த 5 பேர் கொண்ட மர்மகும்பல்அந்த பெண்ணை கடத்திக்கொண்டு ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு தூக்கிச் சென்றுள்ளது.

பின்னர் அப்பெண்ணை மீண்டும் 5 நபர்கள் கொண்ட அந்த கும்பல் வன்புணர்வு செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில தீ வருவதை பார்த்த ஒருவர் போலீசுக்கு புகார் கொடுத்து உடனடியாக அந்த பெண்ணை காப்பாற்றி , மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 90 சதவீத தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அப்பெண் மேல் சிகிச்சைக்காக விமானம் மூலம் டெல்லி கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

தற்போது பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.முன்னதாக தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபர்களே தனக்கு தீ வைத்ததாக அப்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் பின் போலீசார் தஹேவிர தேடுதலில் 5 பேரையும் கண்டுபிடித்து உள்ளனர், பின்பு புகாரின் அடிப்படையில் 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.