“இந்தியன் 2 ” எங்களுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை…! என அறிவித்த ஷங்கர் மற்றும் “லைக்கா நிறுவனம்” அதிர்ச்சியில் ரசிகர்கள்..?

சமீபத்தில் சோசியல் வலைத்தளங்களில் கமல்ஹசன் நடித்து வரும் “இந்தியன் 2 ” படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானது . அதனை பார்த்த இயக்குனர் ஷங்கர் மற்றும் லைக்கா நிறுவனமும் அதிர்ச்சி அடைந்து இந்த புதிய படத்தின் போஸ்டர் போலியானது இதற்கும் எங்களுக்கும் என்ன ஒரு சம்மதமும் இல்லை என்று தனது சோசியல் வலைதள பக்கங்களில் லைக்கா நிறுவனம் வெளியிட்டு உள்ளது. பிரபல நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படம் .இவர்களது கூட்டணி கடந்த 1996ம் ஆம் ஆண்டு ‘இந்தியன்’ திரைப்படம் மூலம் வெளியானது. தற்பொழுது  23 ஆண்டுகளுக்கு பின் இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘இந்தியன் 2’ உருவாகி வருகிறது. கமல்ஹாசன், காஜல் அகர்வால், டெல்லி கணேஷ், நெடுமுடி வேணு உள்ளிட்டோர் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை பிரம்மாண்ட பொருட் செலவில் லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தில் இசையமைப்பாளராக ராக்ஸ்டார் அனிருத் இசையமைகிறார் , ரத்னவேலு ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகைகள் பிரியா பவானி ஷங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ், ரகுல் ப்ரீத், நடிகர்கள் வித்யூத் ஜாம்வால், சித்தார்த், விவேக், ஜெகன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இப்படி பிரமாண்டமான பொருட்செலவில் எடுக்க படும் இந்த படத்தின் போஸ்டர் ஒன்று போலியாக வெளியாகி சர்ச்சைக்குரிய விதமாக அமைந்துள்ளது .இதனால் லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், வைரலாகும் குறிப்பிட்ட போஸ்டர் போலியானது. தயாரிப்பு நிறுவனத்திற்கோ, இயக்குநருக்கோ, படக்குழுவிற்கோ இதில் எந்த சம்மந்தமும் இல்லை’ என தெரிவித்துள்ளது. மேலும் இந்த படம் தமிழ் புத்தாண்டான ஏப்ரல்14 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு வெளியிடப்படவுள்ளது என்று குறிப்பிட்டனர்.