பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் , ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட்டம் …? பிரியங்கா கொலைவழக்கு …….

ஹைதராபாத்தில் அதிகாலையில் நடந்த நான்கு பேர் என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் கூடிய உள்ளுர் மக்கள், பட்டாசுகள் வெடித்து , இனிப்புகள் வழங்கியும் ஆட்டம் படத்துடன் வழுக்கல் சொல்லி கொண்டாடி வருகின்றனர்.கால்நடை மருத்துவர் பிரியங்கா கூட்டு வன்புணர்வு செய்யப்பட்ட எரித்து கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அளிவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வழக்கு தொடர்பில் நான்கு பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதில் இருவர் 18 வயதுகூட ஆகாதநபர்கள்.கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் என்கவுண்டர் செய்ய வேண்டும் என மாநிலம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. சாலை மறியல் , மெழுகுவத்தி ஏத்திவூர்வளம் செலுத்தல் போன்று பலவழிகளில் போராட்டம் நடத்தினர்.

கொலை நடந்து 10 நாட்கள் பிறகு இன்று காலை குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேரும் நடந்ததை செய்து காட்ட சம்பவயிடத்திற்கு கொண்ட செல்லப்பட்டுள்ளனர். அப்பொழுது திட்டமிட்டபடி அவர்களை என்சௌண்டேர் செய்தனர் . இத்தகவலை அடுத்து என்கவுண்டர் நடத்தப்பட்ட பகுதிக்கு விரைந்த உள்ளுர் மக்கள் பொலிசாரை புகழ்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

மேலும், பூக்கள் துவி, பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கைதாட்டி ஆரவாரமாக மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். ‘நீதி வழங்கப்பட்டுள்ளது’ என முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.இந்த என்சௌண்டேர் சரியா ? தவறா? என்ற பல விவாதங்கள் எழும்பி வருகின்றது சோசியல் வலைத்தளங்களில்.