“நா சுத்த சைவம் பா” அசைவத்த தொடக்கூட மாட்டேன்… வெங்காயம் விலை ஏறின என்ன,கொறஞ்சா என்ன…? மீண்டும் மதவாதத்தை தூண்டும் அமைச்சர் ….?

சுகாதாரத்துறை அமைச்சர் கூறிய அலட்சிய பதில்…சைவ உணவு முறையை கடைபிடிப்பதால், வெங்காய விலை உயர்வு பற்றி ‘தனக்கு எதுவும் தெரியாது’ என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபாய் கூறினார் . இந்த சொல் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையைக் உருவாகிவுள்ளது..இந்தியா முழுவதும் வெங்காயத்தின் விலை கிலோ 150 ரூபாய்க்கும் அதிகமான விலைக்கு விற்கப்படுவதால், மக்கள் அவதிப்பட்டுக்கொண்டு வருகின்றனர்.

பலரும் வெங்காயம் கலக்காத உணவுகளைத் தயாரிக்கத் தொடங்கிவிட்டனர். ஆங்காங்கே கடைகளில் கல்லாப்பெட்டிகளுக்கு பதிலாக வெங்காய மூட்டைகளே திருடுபோகின்றன.பொதுவாக மக்கள் உணவில் முதலில் சேர்த்து சமைக்கும் பொருள் வெங்காயம் தான் அதன் விலை இப்படி உயர்ந்ததால் நடுத்தர மக்கள் மிகவும் அவதிக்கு ஆளாகினர் , இதனால் வெங்காயம் இல்லாத சமையல் உப்பு இல்ல பண்டம் போல் ஆகிவிட்டது..மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் , தான் ஒரு சைவ உணவுப்பிரியர் என்பதால் வெங்காயத்தை உண்டதே இல்லை என்றும், அதனால் அதன் விலை உயர்வு பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறியுள்ளார்.

ஒரு பொறுப்புள்ள பதவியில் இருக்கும் சுகாதார துறை அம்மைச்சார் இப்படி ஒரு பதில் கூறினால் பொதுமக்கள் என்ன செய்வார்கள் , மக்களுக்கு உடைத்தும் வகையில் வேறு நடவடிக்கைகளை எடுக்கலாம் அதை செய்யாமல் எனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லி அசால்ட்டாக பதில் சொல்லுவது சரில்லை எண்டு சோசியல் வலைத்தளங்களில் அமைச்சரை கிண்டல் செய்து தாக்கி வருகிறார்கள் நெட்டிசன்கள் ….