காலையில் ராசாத்தி மலையில் ராஜா …? வேற லெவல் இது… 3 வீட்டில் நான் தப்பு பண்ணல…??

மதுரையில் ஒரு வித்யாசமான சம்பவம் நடந்து வருகிறது வேலை கிடைக்காத காரணத்தினால் ஆன் பெண்ணாக மாரி வீட்டு வேலைகளை செய்யும் நிலைமை வந்து விட்டது நம் நாட்டில் . ஒரு நபரின் சொந்த ஊர் மானாமதுரைஅவருக்கு 40 வயது இருக்கும். அவர் லுங்கி, சட்டையுடன் மதுரைக்கு பஸ்சில் வந்து, காமராஜர் சாலை தெப்பக்குளம் பகுதியில் மறைவான ஒரு இடத்துக்கு செல்கிறார்.பிறகு கொஞ்ச நேரத்தில், புடவை, ஜாக்கெட் அணிந்து, தலையில் விக் வைத்து பெண் வேடத்தில் வெளியே வந்தார். இப்படி அவர் தினமும் எங்கிருந்தோ பஸ்சில் வந்து இந்த தெப்பக்குளத்திற்கு பின்னாடி சென்று பின் ஒரு பெண் மாதிரி வருவது அங்கிருக்கும் பல பேர் இதனை கண்டனர் .

ஒருநாள் அவரை அங்கிருந்த மக்கள் மடக்கி பிடித்து கேட்டனர் எதற்காக இந்த வேஷம் எங்கு செல்கிறாய் என்று, அந்த நபர் தப்பிக்க வழி இல்லாமல் அவரை பற்றி சொல்ல ஆரமித்தார், அதாவது அவர் பெயர் ராஜா அவருக்கு வயது 40 , எனக்கு திருமணம் இன்னும் ஆகவில்லை என் பெற்றோர்கள் முதியவர்கள் அவர்களை பார்க்கும் பொறுப்பு மகனான எனக்கு உள்ளது அதனால் நான் எத்தனையோ இடத்தில வேலை கேட்டேன் எனக்கு எங்கும் இதுவரை வேலை கிடைக்கவில்லை அதனால் பெண்ணாக இருந்தால் வீட்டு வேலை செய்து பெற்றோரை கவனித்து கொள்ளலாம் என்று எண்ணி நான் பெண் வேடம் போட ஆரமித்தேன் . மொத்தம் 3 வீடுகளுக்கு சென்று பாத்திரங்கள் தேய்ப்பது, பெருக்கி கூட்டி சுத்தப்படுத்துவது என அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு செய்கிறேன் .

சாயங்காலம் வேலை முடிந்ததும், திரும்பவும் அதே மறைவிடத்துக்கு வந்து விக்கை கழட்டிவிட்டு, லுங்கி, சட்டை அணிந்து பஸ் ஏறி ஊருக்கு போய்விடுவேன் என்று கூறினார் . இதுதான் தினமும் நடந்து வருகிறது. வேலை செய்யும் இடங்களில் ராஜாத்தி என்று என்பெயரை மாற்றி சொன்னேன் . அந்த வேஷம் போட்டுட்டு சொந்த ஊரில் வேலை பார்க்க முடியாது.. எல்லாரும் கிண்டல் செய்வாங்க.. அதனாலதான் ஊருவிட்டு வந்து மதுரையில் வேலை தேடினேன்.3 வீட்டில் வேலை கிடைக்கவும் செய்து வருகிறேன்.. ஆனால் யாருக்கும் என் மேல சந்தேகம் வரவில்லை .. ஒவ்வொரு நிமிஷமும் பெண்கள் போலவே இருக்க படாதபாடு பட்டுட்டு வர்ரேன்.இப்படி வேஷம் போட்டு வேலை பார்த்தாலும், நான் என் எஜமானர்களுக்கு எந்த துரோகமும் பண்ணவில்லை .

ஒருநாள் இந்த விஷயம் வெளியே தெரியும்னு எனக்கு ஏற்கனவே தெரியும்.. அப்படி தெரியும்போது, என்னை மன்னிச்சு இவங்களே திரும்பவும் வேலைக்கு வெச்சிப்பாங்கன்னு எனக்கு ஒரு நம்பிக்கைஇருக்கு என்று சோகத்துடன் கூறினார் தனது வறுமையை பற்றி ராஜா என்கிற ராசாத்தி …
Read more at: https://tamil.oneindia.com/news/madurai/man-in-avvai-shanmughi-get-up-and-working-in-home-near-madurai-370688.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Sticky_Bottom