ஜோடியாக கைதான இளம் தம்பதியகர்கள்…? பாவம் 23 வயசுதான்….. சரமாரியாக அறிவால் வெட்டு….

முன்விரோதம் காரணமாக ஒரு தம்பதியர்கள் வேறு ஒரு தம்பதியர்களை வழி மறித்து சண்டை போடு அரிவாளால் வெட்டி கொன்றனர் அதிகாலையில் இதனால் அந்த இடத்தில் பெரும் பரபரப்புக்கு நிகழ்கிறது,தேனி மாவட்டம் வேப்பம்பட்டியை சேர்ந்த தம்பதி பாண்டீஸ்வரன் – நிரஞ்சனா. பாண்டீஸ்வரனுக்கு 30 வயதாகிறது.. நிரஞ்சனாவுக்கு 23 வயது ஆகிறது. இருவரும் ராயப்பன்பட்டி லூர்துசாமி நகரில் ஒரு வீட்டில் குடியிருந்து வருகின்றனர்,அதே தெருவில் பக்கத்து வீட்டில் குடிக்கும் தம்பதியர்கள் மணிகண்டன் – ராஜேஸ்வரி .இவர்களுக்கும் பாண்டீஸ்வரன் தம்பதியர்களுக்கு அடிக்கடி சண்டை வந்துஉள்ளது, அக்கம் பக்கம் சண்டை போடுவது ஒன்றும் புதிது அல்ல வழக்கமாக அனைவர் வாழ்வில் உள்ள ஒரு நிகழ்வு தான் ,ஆனால் இது அப்படி அல்ல ..

இன்று காலை5.30 இருக்கும் மணிகண்டன் தம்பதியர்கள் இலை அறுப்பதற்காக சண்முகநதி டேம் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது, பாண்டீஸ்வரனும் நிரஞ்சனாவும் அவர்களை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில், மணிகண்டனை பாண்டீஸ்வரியும் – நிரஞ்சனாவும் அரிவாளால் சரமாரியாக வெட்டியும் உள்ளனர். இதனை தடுக்க வந்த ராஜேஸ்வரியையும் வெட்டினர்.இந்த சம்பவத்தில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராஜேஸ்வரிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.. தகவலறிந்து ராயப்பன்பட்டி போலீசாரும் வந்துவிட்டனர்..

உடலை கைப்பற்றி போஸ்ட் மார்ட்டம் செய்ய உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இப்போது, ராஜேஸ்வரி முதலுதவி சிகிச்சைக்கு பிறகு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கும் அனுப்பி வைக்கப்பட்டார். இதையடுத்து, பாண்டீஸ்வரன், நிரஞ்சனா தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். முன்விரோதத்தால் கொலை செய்ய துணிந்த இந்த சமத்துவம் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.