தீவிபத்தில் மாட்டிக்கொண்ட நபர் …என்குடும்பத்தை பார்த்துக்கொள் நான் பிழைக்க மாட்டான் நண்பா ?…. இறுதி பேச்சி …..!

டெல்லியில் நேற்று அதிகாலை பைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் நடந்த தீவிபத்தில் 47க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் .இதில் முகமது முஷாரப் தீவிபத்து நடக்கும்பொழுது தான் நண்பனான மோனு அகர்வாலுக்கு போன் செய்து தனது குடும்பத்தை பார்த்துக்கொள்ள கண்ணீர் மல்க வேண்டுகோள் புரிந்துள்ளார். டெல்லியில் உள்ள அனாஜ் மண்டி என்ற வணிக வளாகத்தில் ஏராளமான கடைகள், ஆலைகள் உள்ளன. இங்கு பைகள் தயாரிக்கும் ஒரு ஆலையில் ஏராளமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

அவர்களில் சிலர் மண்டியிலேயே தங்குவது வழக்கம். அது போல் நேற்று முன்தினம் இரவும் பல பணியாளர்கள் தங்கிஉள்ளனர்.திடீரென நேற்று அதிகாலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து ஆலையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு எழுந்தனர். மிகவும் கூறுகளை சாலை என்பதால் தீ வேகமாக பரவியது . இதனால் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் வந்திருந்தன. தீ அணைத்து முடிப்பதற்குள் 43 பேர் உயிரிழந்துவிட்டனர்.

இந்த 43 பேரில் உயிரிழந்த ஒருவரான முகமது முஷாரப் (34) என்ற இளைஞர் தீவிபத்து ஏற்பட்ட போது உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தனது நண்பர் மோனு அகர்வாலுக்கு போன் செய்துள்ளார். எனது ஆலையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் என்னால் உயிர் பிழைக்கமுடியாது. எனவே எனது குடும்பத்தை பார்த்துக் கொள் என கூறியிருக்கிறார். இதனால் பதறிய மோனு, நம்பிக்கையை இழக்காதே. கட்டடத்தின் ஏதாவது ஒரு வழியிலிருந்து குதித்து விடு தப்பிச்சிடலாம் என்று கூறிஉள்ளார் .

அப்போது முஷாரப், தீயணைப்பு வாகனங்களின் ஒலியை கேட்டுவிட்டு உதவிக்கு வந்துள்ளனர் என கூறினார். அதுதான் அவர் பேசிய கடைசி பேச்சு என மோனு உருக்கமாக தெரிவித்தார். இருவரும் உத்தரப்பிரதேச மாநில தன்டமைதாஸ் பகுதியில் சிறுவயதிலிருந்தே உயிர்நண்பர்கள். கடந்த இரு நாட்களுக்கு முன்னர் இருவரும் சேர்ந்து பிஜனோரில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டதுதான் கடைசி சந்திப்பாகும் என மோனு கண்ணீர்விட்டார். என்நண்பன்யிடம் நம்பிக்கையாக இரு நீ சாகமாட்டாய் என்று கூறினேன் .