நீண்ட நாள் பிறகு பிக் பாஸ் கவினின் மகிழ்ச்சி …..?? விருது பெற்ற காதலி …!!!

திரையுலகினர் மற்றும் சின்னத்திரை பிரபலங்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியானது “BEHINDWOODS GOLD MEDAL AWARDS ” நிகழ்ச்சி சென்னையில் நேற்று  நடைபெற்றது. இதில் தனுஷ், சிவகார்த்திகேயன், அருண் விஜய், நிவின் பாலி, யாஷ், மஞ்சு வாரியர் இயக்குநர்கள் ஷங்கர், வெற்றிமாறன், செல்வராகவன், லோகேஷ் கனகராஜ், அமீர், இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா உட்பட திரளான திரையுலகினர் பங்கேற்றனர்.

இதில் நம் அனைவர் மனதில் தற்பொழுது பிரபலமான காதல் ஜோடிகள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமான லொஸ்லியாவிற்கு, இந்நிகழ்ச்சியில் ‘Most Popular person on Television’ விருது வழங்கப்பட்டது. அவருடன் அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அபிராமியும் அங்கு வந்திருந்தார்.

விருதுபெற்ற லாஸ்லியாவோடு செல்ஃபி எடுத்துக்கொண்ட அபிராமி எதிர்காலத்தில் இதுபோல பல விருதுகள் அவரை தேடிவரும் என இன்ஸ்டாவில் வாழ்த்தி உள்ளார். இந்த விழாவில் நடிங்கர் கவினும் பங்கேற்று லொஸ்லியவை வாழ்த்தி உள்ளார் . மேலும் லொஸ்லியாவிற்கு இந்த விருது கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று சிரித்த முகத்துடன் கூறினார்.