” தல ” தான் முதல் இடம் !!! ….”தூக்கு துரைன்னா அடாவடி…தூக்குத் துரைன்னா அலப்பற” மகிழ்ச்சியில் ஆர்ப்பாட்டம் செய்யும் ரசிகர்கள் ….

ஜீ தமிழ் டிவி திரையின் திருவிழா என்று “CINI AWARDS 2020 ” விருதை வழங்க உள்ளது. அதற்கான NOMINEES அறிவித்து வோட்களை வழங்குமாறு அறிவுறுத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளர்களாக தீபக், பெர்லி தொகுக்கவுள்ளார்கள் , இவர்கள் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளர்களாக உள்ளவர்கள்.

இதில் முதலாவதாக கதாநாயகருக்கான நோமினீஸ் அறிவிக்கப்படவுள்ளது. இதில் நடிகைகள் சிநேகா, பூஜா, பிரியா ராமன் முன்னிலையில் அல்டிமேட்ஸ்டார் அஜித் குமார் அறிவிக்கப்பட்டார். அதில் அவர் நடித்த விஸ்வசம் படத்தின் ஒரு டயலாக்-ஐ சொல்லி “தூக்குத் துரைன்னா அடாவடி…தூக்குத் தொரன்னா அலப்பற” முதல் நாமினியாக அறிவிக்கப்பட்டார்.

நடிகர் அஜித் இதில் விருது பெற்றால் அவர் வருவாரா என்ற ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. இரண்டாவதாக அறிவிக்கப்பட்டார் நடிகர் தனுஷ். இவர் நடிப்பே வேற லெவல்ல இருக்கும் . மூன்றாவது நாமினியாக நடிகர் கார்த்தி இருக்கிறார் .

தற்பொழுது தீபாவளி அன்று வெளிவந்த கைதி படம்தான் வெற்றிநடை போட்டது . அடுத்து சூப்பர்ஸ்டாரின் பேட்டபராக், சிவ கார்த்திகேயன் , சூர்யா என்று இன்னும் சில நடிகர்களையும் ஜீ தமிழ் டிவி தனது ட்வீட்டர் வலைத் தளத்தில் நாமினிஸாக அறிவித்து பதிவிட்டு உள்ளது. இதுவே நடிகர்களுக்கான நாமினிஸ் பட்டியல்.