‘பெற்ற அம்மாவுக்காக60 வயது பாட்டியாக மாறிய இளைஞர்’..! பின்னர் “போலீசில்” சிக்கிய பரிதாபம்..?

வடக்கு பிரேசிலில் உள்ள போர்டோ வெல்ஹோ என்ற பகுதியில் ஹீட்டர் ஷியாவே(43) என்பவர் வசித்து வருகிறார். ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்காக பெண் போல வேடமிட்டு நடத்தப்பட்ட சோதனையில் கலந்து கொண்டார்.

அப்போது அவர் செய்த செயல்களை பார்த்த அதிகாரிகள் சந்தேகமடைந்தனர். மேலும் அவரின் கனத்த குரலால் மேலும் சந்தேகம் தீவிரமானது. பின்னர் அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததில் பேரில்அந்த பெண்ணை கைது செய்தனர் விசாரணையில். அவர் ஆண் என்பது தெரியவந்தது மேலும் அவர் கூறியது.

60-வயதுடைய என் அம்மா நீண்ட நாட்களாக கார் ஓட்டவேண்டும் என்று ஆசையாக இருந்தார்கள் அதற்காக ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்காக நடத்தப்பட்ட சோதனையில் தொடந்து மூன்றுமுறை முயற்சித்தும் வெற்றிபெறமுடியவில்லை அதனை மனதில் கொண்டு என் அம்மா போல வேடமிட்டு ஓட்டுநர் சோதனையில் கலந்து கொண்டேன் . அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வாங்குவதற்காக இவ்வாறு செய்தேன் என்று மெய்சிலிர்க்க வைத்த காரணத்தை கூறினார்.