கடத்தல் வேனுடன் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பஸ்..?? மொத்த பயணிகளும் கருகினர்….!! பகீர் சம்பவம்..

இன்று காலை பாகிஸ்தானின் பயணிகள் பேருந்தும் ஒரு என்னை டேங்கர் வேனும் நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் சம்பவ இடத்துலேயே உடல் கருகி உயிர் இழந்தனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஜாப் மாவட்டத்தின் கான் மெஹ்தர்சாய் பகுதியில் இன்று இந்த துயர சம்பவம் ஏற்பட்டுள்ளது. பாக்கிஸ்தான் பயணிகள் பேருந்தில் 44 பயணிகள் சீட்டுகளை கொண்ட பேருந்தில் சுமார் 15 பேர் மட்டுமே அமர்ந்து இருந்தது இப்படி பட்ட கொடூர சம்பவத்திலும் ஒரு சிறு நிம்மதியை தரக்கூடியது ஆகும் எனக்குறிப்பிடத்தக்கது.


வேனின் கட்டுப்பாட்டை இழந்த டிரைவர் தான் எதிரில் வந்த பயணிகள் பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதியதில் அந்த வேனில் இருந்த என்னை தீ பிடித்து எரிய ஆரமித்தது. பேருந்தில் இருந்தவர்கள் தப்பிக்க கூட வழி இல்லாதது போல் அணைத்து இடங்களிலும் தீ பரவியது . இதனால் அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு உடல் கருகியது. மேலும் என்னை ஏற்றி வந்த அந்த வேன் இரானிலிருந்து கடத்தி வந்த என்னை ஆகும் அதை கடத்தியவர் யார் அந்த மர்ம வேனை பற்றி போலீசார்கள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.

மேலும் அந்த பேருந்தில் பயணம் செய்தவர்கள் யார் யார் என்பதையும் விசாரித்து ஒப்படைக்க விசாரணை நடந்து வருகிறது. இதில் ஒருவர் மட்டும் எப்படியோ ஜன்னல் வழியாக வெளியே குதித்து உள்ளார் . அவர் உயிர் பிழைத்தாலும் அவருக்கு படுகாயம் ஏற்பட்டதால் அவர் தீவிர சிகிச்சையில் ஈடுபட்டார்.