பாடிபில்டருக்கு இரவில் லிப்ட் கொடுத்த இளம் பெண் ..? கார் டிரைவர் கண்முன்னே நேர்ந்த கொடூரம் ….?? அதிர்ச்சி சம்பவம் …

சில நாட்களுக்கு முன்னர் ஹரியானாவில் ஒரு இளம் பெண் நெற்றியில் சுட்டு கொலை செய்ய பட்டார். அவர் ராஜஸ்தானை சேர்ந்தவர், டெல்லியில் தங்கி படிக்கிறார். உறவினர்கள் குடுத்த புகாரின் அடிப்படையில் விசாரித்ததில் அந்த பெண் தான் காதலன் ஹேமந்த் லம்பா உடன் ஒரு ஓலா வாடகை காரில் பயணித்துள்ளார். ஹேமந்த் லம்பா என்பவர் ஒரு பாடி பில்டர். அந்த பயணத்தில் அவருக்கும் காதலனுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது , அதில் காதலன் ஹேமந்த் லம்பா துப்பாக்கியை எடுத்து சுட்டுவிட்டார் நெற்றியில்.அதனை பார்த்த டிரைவர் தேவேந்திரன் அதிர்ந்து போய் காரை நிறைத்தினார்.

ஹேமந்த் லம்பா துப்பாக்கியை காட்டி டிரைவரை மிரட்டி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அந்த பெண்ணை வீசிவிட்டு காரை வேகமாக டெல்லிக்கு ஓட்டச்சொன்னார். டிரைவர் ஹரியானா நெடுஞ்சாலை வழியாக ஒட்டிக்கொண்டு போகும் பொழுது டிரைவரையும் சுட்டு கொன்று விட்டு டிரைவரை வெளியே வீசி காருடன் தப்பித்து விட்டார் ஹேமந்த் லம்பா. காருடன் சென்ற ஹேமந்த் லம்பா காரை விற்க டீலரை அணுகி உள்ளார் .

அவரை சந்தேகப்பட்ட டீலர் காரில் இருந்த மொபைல் நம்பருக்கு போன் செய்து உள்ளார் .அப்பொழுது காரின் உரிமை ஆளர் தேவேந்திரனின் மனைவி யாரோ தன் கணவர் சுட்டு கொலை செய்ததை கூறியதும் டீலர் போலீசுக்கு புகார் தெரிவித்து உள்ளார், அதன் அடிப்படையில் ஹேமந்த் லம்பா கைது செய்ய பட்டு விசாரணையில் உள்ளார்.