‘மாத்திரையின் மூலம் குழந்தை பெறலாம்! என நம்பி போன 28 வயது பெண்.. ‘சித்த வைத்தியர்’ நடத்திய அரங்கேற்றம்..?

சென்னை பட்டாபிராம் மேற்கு கோபாலபுரம் காலனியில் ராஜா என்பவர் வசித்துவருகிறார், இவர்க்கு கடந்த மூன்று மாதங்களாக மஞ்சள் காமாலை இருந்துவந்துள்ளது இதனால் கீழ்ப்பாக்கம் சித்த வைத்தியசாலை வைத்திருக்கும் அண்ணாதுரை என்பவரிடம் சிகிச்சை எடுத்து வந்தார்.

மாதம் ஒருமுறை சிகிச்சை பெரும் போது தன் மனைவியை உடன் அழைத்து செல்வார் ராஜா தம்பதியினருக்கு திருமணமாகி மூன்று வருடங்கள் ஆனநிலையில் குழந்தை பெறவில்லை என்று மருத்துவரிடம் கூறியுள்ளார்.

என்னிடம் சித்த மருந்து உள்ளது அதனை நீங்கள் சாப்பிட்டால் ஆறு மாதத்தில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று கூறினார் வைத்தியர்.

ஒருவாரம் கழித்தது வைத்தியர் ராஜா தம்பதியினரை வைத்திய சாலைக்கு வரச்சொன்னார் அப்போது ராஜா ஊரில் இல்லாததால் அவர் மனைவி வைத்தியரிடம் சென்றுள்ளார் பின்னர் எதோ பேசிவிட்டு அப்பெண்ணை பாலியல் தொல்லைகொடுத்துள்ளார் சுதாரித்து கொண்ட பெண் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். பின்னர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.