70 வயதில் இளம் மனைவியை தேடுகிறார் 39 மனைவிகளை கொண்ட முதியவர்….!!

இறைவன் கொடுத்த வராம இல்லை இது ஒரு சாபமா என்று தெரியவில்லை , இப்பொழுது எல்லாம் திருமணம் முடிந்த சில மாதம், இல்லை சில வருடங்களிலே பிரிந்து விடுகிறார்கள் தம்பதியர். அல்லது தற்கொலை செய்து கொள்கிறார்கள் .இப்படி பட்ட திருமண பந்தத்தில் வுடல் இல்லாத நிலையில் 39 மனைவிகளுடன் வாழும் 70 வயது கணவர்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரமைச் சேர்ந்தவர் ஜியோனா சானா. இவருக்கு 39 மனைவிகள் , 94 பிள்ளைகள் , 33 பேரக்குழந்தைகள் , 14 மருமகள்கள் , மற்றும் பேரகுழந்தைகள் என பெருவாழ்வு வாழ்கிறார் ஜியோனா சானா. இவர் தனது சொந்த கிராமத்தில் 100 அறைகள் கொண்டு ஒரு பெரிய மாளிகை கட்டி வாழ்கிறார். அதில் இளம் வயது மனைவிகளை தான் படுக்கை அறைக்கு பக்கத்தில் உள்ள அறைகளில் தங்க வைத்து இருக்கிறார்.

வயதான மனைவிகளை தூரம் தள்ளி ஒதுக்கு புறமாக அறையில் வைத்து இருக்கிறார், அனைவரின் சுகதுக்கங்களில் பங்கு பெற்று அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து சந்தோஷமாக இருக்கிறார். இந்நிலையில் அவரிடம் அவர் வாழ்க்கையை பற்றி கேட்டதற்கு நான் பெரும் பாக்கியசாலி அதனால் தான் எனக்கு இவ்வளவு பெரிய குடும்பத்தை கடவுள் குடுத்து இருக்கிறார் .

எனக்கு இதில் சந்தோசம் தான் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இது மட்டும் இல்லாமல் அவர் தன் குடும்ப எண்ணிக்கையை பெறுக வேண்டும் என்று திட்டமிட்டு உள்ளார். அதனால் அவர் மேலும் திருமணம் புரிய முடிவெடுத்து இருக்கிறார். அதனால் அவர் சின்ன இளம்வயது பெண்ணை அதாவது மணமகளை தேடி வருகிறார்.