தலைவாசல் விஜய் மகளின் வெற்றி..? பெருமையில் இந்தியர்கள் …!! சாதனை மகிழ்ச்சியில் ஜெயவீணா …

தமிழ் நடிகரான தலைவாசல் விஜய்க்கு இரண்டு பிள்ளைகள் , அவர்கள் இருவருமே நீச்சல் வீரர்கள் ஆவர் . அதில் அவரது மகள் ஜெயவீணா பல நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்றுள்ளார். ஜெயவீணா SRM பல்கலை கழகத்தில் BSc ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் படித்து வருகிறார் .அவர், அண்மையில் சண்டிகரின் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அகில இந்திய இன்டர்-யுனிவர்சிட்டி நீர்வாழ் சாம்பியன்ஷிப்பில் விளையாட்டு போட்டியில் மூன்று தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.

இது மட்டும் அல்லாது தற்பொழுது நேபால் தலைநகரான காட்மண்டுவில் நடைபெற்ற 13வது தெற்காசிய போட்டியில் 50மீட்டர் பிரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் பங்கு பெற்று வெள்ளி பதக்கம் வென்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். தன் மகள் ஜெயவீணா இப்படி விளையாட்டில் வெற்றி பெற்று சாதனை படைப்பது எனக்கு மிகவும் பெருமை தருகிறது .

அது மட்டும் அல்லாமல் எனது மகள் மற்றும் மகன் இருவருமே நீச்சல் வீரார்கள் தான் இருவரும் நிறைய வெற்றி சாதனை அடைந்து வாழ்வில் மேலும் மேலும் வளர விரும்புகிறேன் என்று பெருமையுடன் தெரிவித்தார். நடிகர் தலைவாசல் விஜய் தன் மகளின் எந்த ஒரு விளையாட்டு போட்டி நடந்தாலும் அவருடன் சென்று அவரைவூக்குவிப்பர் என்பது குறிப்பிடத்தக்கது.