2020ல் வரும் சனிபெயர்ச்சி… பலனடையும் இந்த ராசிகள் .. பிரிந்த தம்பதியர் சேரும் இந்த ராசிக்கு …

பிறக்கவிருக்கும் 2020ல் எந்த எந்த ராசிக்கு நற்பலன்கள் வரும் என்று பார்க்கலாம். குருவும் சனியும் சேர்ந்தால் சில ராசிக்கு நல்லது நடக்கும் .அதாவது அவர்கள் வாழ்வை உச்சத்திற்கு கொண்டு செல்லும். தனுசு ராசியில் கேதுவுடன் சனிபகவான் இவ்வளவு நாட்களாக இருந்து வந்தார். ஆனால் இப்பொழுது சனிபகவான் மகர ராசிக்கு ஜென்மத்தில் செல்ல போகிறார். மகர ராசியில் 3 ஆண்டுகளுக்கு அவர் இருக்க போகிறார் . ஆனால் 70 நாட்கள் மட்டும் கும்ப ராசிக்கு சென்று வருவார்.                 இந்த 2020ல் மகர ராசிக்கு சனிபகவான் செல்வதால் மத்த எந்த ராசிக்கு நல்ல பலன்கள் என்று சொன்னால் :

மேஷம் :குரு பகவான் கேதுவுடன் இணைந்து பாக்கிய ஸ்தானத்தில் வரப்போகிறார் அதனால் சந்தோசம் ஊஞ்சல் ஆடும் . பணவரவு அதிகமாக இருக்கும், ராஜயோகமான ஆண்டு இந்த 2020 .

ரிஷபம் : கடந்த இரண்டு ஆண்டுகள் நஷ்டமா இருந்ததால் இந்த ஆண்டு அப்படி இருக்காது உங்களின் தசா புத்தி நன்றாக இருப்பதால் பணவரவு அதிகமாக இருக்கும் .விட்டதை பிடிக்கலாம் இந்த 2020 .

மிதுனம் : குரு பகவான் நேரடியாக அமர போகிறார் அதனால் பணவரவு உண்டு, நல்லது நடக்கும் ஆண்டு, மேலும் சனி பகவான் அஷ்டமத்து சனியாக வரப்போகிறார் ஆனால் அது உங்கள் ராசிக்கு மறைவு இடமாக இருக்கிறது உங்கள் அதிஷ்டம் என்று சொல்லலாம் அதனால் புதிய தொழிலைகூட நீங்க தொடங்கலாம் .

விருச்சிகம் : வரப்போகும் இந்த 2020 ஆண்டு இந்த ராசிக்கு மட்டும் தான் அதிக அதிர்ஷ்டம் வரப்போகுது, ஏன் என்றால் இந்த ராசிக்கு ஏழரை சனி முடிந்து விட்டது.நீங்கள் விட்டதை பிடிக்கலாம் இந்த ஆண்டில். அதுமட்டும் இல்லாமல் குருவும் சனியும் ஒன்று சேர்ந்து உங்கள் ராசிக்கு பல பலன்களை அள்ளித்தர போகிறார்கள். அதனால் உங்கள் ராசிக்கு இனி இந்த 2020 ஆண்டு முழுவது ராஜயோகம் தான் பிறக்க போகிறது..

சிம்மம் : பிறக்க விருக்கும் இந்த 2020 ஆண்டு உங்கள் ராசிக்கு இழந்ததை மீட்கும் ஆண்டாக மாறப்போகிறது உங்களுக்கு. அதாவது உங்கள் ராசிக்கு பகவான் சூரியன் , ஆனால் சனி உங்கள் ராசிக்கு 6 இடத்தில் வரபோகிறது. அது மறைவு இடம் இதனால் உங்கள் ராசியில் விட்டதை பிடிக்கலாம் இந்த ஆண்டு ராஜயோகம் தான்.

கும்பம் : வரபோகும் இந்த 2020 ஆண்டு உங்கள் ராசிக்கு துன்பம் நீங்கி சந்தோசம் கூடும் ஆண்டாக மாறப்போகிறது .ஏன் என்றால் உங்கள் ராசியில் சனிபகவான் மறைவு இடத்தில் வரப்போகிறார், அது மட்டும் இல்லாமல் குரு லாப இடத்தில் இருக்க போகிறார் .அதனால் பண வரவும் கூடும் ஆண்டாக இருக்கும் .

மீனம் : இந்த ஆண்டில் சனிபகவானின் அருளால் உங்களுக்கு கஷ்டங்கள் நீங்கி இன்பங்கள் பிறக்க போகிறது. உங்கள் வாழ்வில் இந்த ஆண்டு சந்தோசம் மட்டுமே உள்ள ஆண்டாக மாற போகிறது .