‘சென்னையில் பதற்றம்! உதயநிதி ஸ்டாலின் கைது..? குடியுரிமை சட்டத்திருத்த’ மசோதா நகல்… “கிழிப்பு”

சென்னை சைதாப்பேட்டை சிக்கனலில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றியதை எதிர்த்து திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆயிரக்கணக்கானோர் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

பின்னர் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து அண்ணா சாலையில் சட்ட திருத்த மசோதாவை கிழித்தெறிந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்துக்கு இடையோராக நடந்து கொண்டதால் உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர்.

பின்னர் போலீஸ் வாகனத்தில் உதயநிதி ஸ்டாலின் இருந்ததை அடுத்து திமுக தொண்டர்கள் வாகனத்திற்கு வழிவிடாமல் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.