9ம் வகுப்பு அக்கா வேணாம்! 7ம் வகுப்பு தங்கச்சி தான் வேணும்!!.. “சம்மதித்த பெற்றோர்கள்” 30வயது இளைஞரால் நடந்த கொடூரம்..?

வேலூர் மாவட்டம் காட்பாடியை சேர்ந்த விவசாயி இவர்க்கு 14வயதில் ஒருமகளும் 12வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் பள்ளியில் படித்துவருகிறார்கள். இவர்களின் உறவுக்கார மாமன் என்று சொல்லப்படும் கோபிநாத் என்பவர் ஆந்திர மாநிலம் சித்தூரில் வசித்துவருகிறார். கோபிநாத்திற்கு 30வயதாகியும் திருமணம் ஆகவில்லை அதனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காட்பாடியில் இருக்கும் உறவினர் விவசாயி பெண்ணை பார்க்கவந்துள்ளனர்.

முதலில் 14வயது இருக்கும் பெண்ணை பார்த்தனர் இருவருக்கும் ஜாதகம் சரிவர பொருந்தவில்லை என்பதால் அடுத்த 12வயது பெண்ணின் ஜாதகத்தை பார்க்கும் போது சரியான பொருந்தியது, அடுத்து திருமண பேச்சை பேசினார்கள் பணக்கார மாப்பிளை என்பதால் சிறுமியின் பெற்றோர்களும் சம்மதித்தனர்.

ஆனால் சிறுமியோ நான் தொடர்ந்து படிக்கவேண்டும் அடம்பிடித்தார் பின்னர் பெற்றோர்கள் சிறுமியை பணியவைத்து இளைனருக்கு திருமணம் செய்துவைத்தனர். பின்னர் சிறுமி பள்ளியில் தான் படித்த சான்றிழை வாங்க பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர் ஆசிரியர்கள் என்னாச்சி என்று விசாரித்தனர் நடந்ததை அனைத்தும் ஆசிரியரிடம் கூறினார் சிறுமி.

குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் ஆசிரியர்கள் புகார் அளித்தனர் அதன் பேரில்சிறுமியின் பெற்றோர்கள், கணவன் கோபிநாத் என ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.