சனி பெயர்ச்சி பலன்கள் 2020 – பூர்வ ஜென்ம பலன்களை அடையப்போகும் ” கும்பராசி ” அன்பர்கள்…!!!

கும்ப ராசி நபர்களுக்கு இந்த ஆண்டு அதிஷ்டமான ஆண்டாக அமைய போகிறது.5 தாம் வீடான லாப ஸ்தானத்தில் ராகு வர போகிறார் பலமான நன்மை உண்டு.. உங்கள் ராசிநாதனான சனி பகவான் மகர ராசிக்கு வருவதால் உங்கள் ராசிக்கு அவர் நல்லது மட்டும் தான் செய்வார் . உங்களுக்கு வெற்றிமேல் வெற்றி வரும் ஆண்டு இது.
இந்த 2020 பிறக்கும்பொழுதே மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் செவ்வாய் தனுசுவில் கேது, குரு, சூரியன், சனி, புதன், மகரத்தில் சுக்கிரன் கும்பத்தில் சந்திரன் என கிரகங்களின் அமைந்து விடுகின்றன . அதனால் உங்கள் ராசிக்கு நன்மை மட்டுமே நடக்கும்.


சனிபெயர்ச்சி இந்த ஆண்டின் துவக்க மாதமான ஜனவரியில் வருவதால் உங்களுக்கு எந்த வித கஷ்டமும் வராது , ஏன் என்றால் சனி பெயர்ச்சி தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு செல்கிறார். உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சனி வருகிறார் ஆனால் லாப ஸ்தானத்தில் குருவும் , கேதுவும் வருகிறார். குரு லாபத்தில் இருப்பதால் சனியினால் பாதிப்பு வந்தாலும் குரு அதனை கொடுத்து விடுவார்.


நல்ல புதிய வேலைகள் வரும் . 30 வயதிற்கு மேற்பட்டோர்களுக்கு “லக்கி ” ஆண்டு என்று சொல்லலாம் . லாப ஸ்தானமாகிய 11 ஆம் இடத்தில் குரு இருப்பதால் குழந்தை பிறகும் பாக்கியம் உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் முண்ணேற்றம் கிடைக்கும் அது மட்டும் இல்லாமல் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு உண்டு. உடல் நலம் படிப்படியாக முன்னேரி வரும், வியாதிகள் குணமாகும். மொத்தத்தில் இந்த ஆண்டு அதிஷ்டம் வரும் ஆண்டு உங்களின் வாழ்வில் ஒளிமயமான எதிர்காலம் பிறக்க போகிறது.