சச்சினுக்கு ‘அட்வைஸ்’ பண்ண சென்னைக்காரர்..! கண்டு பிடித்து கொடுக்குமாறு உதவி கேட்ட சச்சின்…

சச்சின் கூறியது : சில வருடங்களுக்கு முன்னர் டெஸ்ட் மேட்சி விளையாடுவதற்காக சென்னைக்கு வந்தேன் அப்போது தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் தங்கியிருந்தேன் அப்போது காபி ஒன்றை ஆடர் செய்தேன் அந்த ஹோட்டல் ஊழியர் காபியை எடுத்து வந்தார் சார் உங்களிடம் ஐந்து நிமிடம் பேசவேண்டும் என்று கூறினார்.

அந்த ஊழியர் நான் உங்களின் தீவிர ரசிகர் என்று பேச ஆரமித்தார் பிறகு நீங்கள் பேட்டிங் ஆடும் ஸ்டைல் எனக்கு ரொம்ப பிடிக்கும் அதோடு நீங்கள் பேட்டிங் ஆடும் போது உங்கள் கையில் பொருந்தி இருக்கும் எல்போ பேடு உங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. அதனால் நீங்கள் அதனை ரீ-சைஸ் செய்து கொண்டு பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.

நான் மிகவும் ஆசிர்யப்பட்டேன் இந்த உலகத்தில் இதனை யாருமே கவனிக்கவில்லை என் மனைவி கூட இந்தவித அட்வைஸை செய்யவில்லை அதன் பிறகு என் எல்போ பேடு சைஸை மாற்றி அமைத்து தற்போது விளையாடுகிறேன்.

நான் அந்த மினிதரை மீண்டும் பார்க்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன் நீங்கள் அவரை கண்டு பிடித்து தாறுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தமிழில் எழுதியும் வீடியோ வெளியிட்டுள்ளார்.