மர்மமாக காணாமல் போன இரண்டு மாணவிகள் …?? டியூஷன் சம்பவம் .!! தீவிர தேடலில் போலீசார்கள் ..

அண்ணா கோபத்தில் திட்டியதால் காணாமல் போன தங்கைகள் .நெல்லை மாவட்டத்தில் வள்ளியூரில் பகுதியை சேர்ந்தவர் கந்தன். இவருக்கு மகன் மற்றும் மகள் பவித்ரா என்று இருவர்கள் உள்ளனர். அதுபோல் அதே பகுதியில் வசிப்பவர் சண்முகம் இவருக்கு சிந்து என்று ஒரு மகள் உள்ளார்.

இருவரும் ஒரே பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்கள் . இரண்டு தோழியும் டியூஷன் செல்வதாக பொய்ச்சொல்லி வேறு எங்கோ சென்று இருக்கிறார்கள். இதனை கண்டு பிடித்து பவித்ராவின் அண்ணன் கண்டித்து உள்ளார் .இதனால் இருவரும் அழுது கொண்டு உள்ளனர். சிறிது நேரம் கழித்து இருவரும் கடைக்கு சென்று வருகிறோம் என்றுக்கூறிவிட்டு சென்று உள்ளனர்.

ஆனால் வெகு நேரம் ஆகியும் வரவில்லை. இரவு முழுவதும் தேடி உள்ளனர் இருவரும் வராத காரணத்தினால் அவர்கள் போலீசில் புகார் கொடுத்து உள்ளனர் .போலீசும் தீவிர விசாரணையில் தேடி வருகின்றது அந்த இரண்டு மாணவிகளை.