15 வருடம் விவசாயம்’… 15 லட்சம் கடன்’.. ‘ஒரே மாதத்தில் கிடைத்த அதிர்ஷ்ட்டம்’ கோடீஸ்வரர்.. எப்படி தெரியுமா…?

கர்நாடக மாநிலத்தில் உள்ள சித்ரதுர்கா மாவட்டத்தை அடுத்த தொட்டசித்தவனஹள்ளி என்ற கிராமத்தைச் சார்ந்த விவசாயி மல்லிகார்ஜூன்.இவர் கடந்த 15 வருடங்களாக வெங்காயம் பயிரிட்டுவந்தார். இவருக்கு சொந்தமாக பத்து ஏக்கர் நிலம் உள்ளது மேலும் பத்து ஏக்கர் நிலத்தை குத்தைக்கு வாங்கி வெங்காயத்தை பயிர் செய்துவந்தார்.

இந்த வருடம் வெங்காயம் விலை ஏற்றம் வரும் என்று நினைத்து 15-லட்சம் கடன் வாங்கி விவசாயத்தை செம்மையாக செய்துவந்தார். அவர் நினைத்தை போலவே இந்தவருடம் வழக்கத்திற்கு மாறாக வெங்காயவில்லை உச்சத்தை தொட்டது.

முன்னர் ஒரு குவிண்டால் வெங்காயம் 6 ஆயிரம் விறபனையாகும் தற்போது ஏற்பட்டுள்ள வெங்காய தட்டுப்பாட்டினால் ஒரு குவிண்ட்டல் சுமார் 14 ஆயிரம் வரை விற்பனை செய்துள்ளனர். இவரிடம் சுமார் 50 வேலையாட்கள் வேலைசெய்துவருகிறார்கள்.

இதனால் 15 லட்சம் கடனில் இருந்த நான் இந்த மாதம் மட்டும் ஒரு கோடி வரைக்கும் சம்பாரித்தேன் என்று கூறினார்.