தனக்கு தானே தலை பிரசவத்தை பார்த்த இளம்பெண் ..?? எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் பரபரப்பு..!!

25 வயதான இளம் பெண் துணைக்கு யாரும் இல்லாத காரணத்தினால் தன்னுடைய தலை ப்ரிசவத்தை தனக்கு தானே துணிச்சலுடன் பார்த்துக்கொண்டாள். ரயில்வேயடி ஸ்டேஷனில் அதுவும் நள்ளிரவில் . இந்த சம்பவம் நடந்தது சென்னை எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனில் . ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா அருகே பாப்பநாடு பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி ரம்யா (25). இவர்கள் வேலை நிமிர்த்தம் விஷயமாக சென்னைக்கு வந்து உள்ளனர் .

அதனால் அவர்கள் அந்த விஷயத்தை முடித்து விட்டு பிறகு தான் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்தனர். ஆனால் அவர்கள் ஊருக்கு செல்லும் ரயில் நாளை காலை தான் என்பதனால் அவர்கள் ரயில்வே ஸ்டேஷனில் தங்கியுள்ளனர் . அப்பொழுது கர்ப்பிணியாக இருந்த ரம்யாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அருகில் யாரும் இல்லை பிறகு கணவரும் நன்றாக தூங்கிக்கொண்டு இருந்துவுள்ளார்.

அதனால் அவள் மனதைரியத்தோடு தனக்கு தானே பிரசவித்து உள்ளார். விடியக்காலை கணவர் கண்விழித்து பார்த்தபொழுது உங்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளது என்று கூறினால். அந்த வேலையில் ரோந்து பணியில் வந்த ரயில்வே போலீசார்கள் அதனை கண்டு உடனே ரயில்வே அவசர பிரிவு சிகிச்சையில் அனுமதித்து உள்ளனர். இந்த சம்பவத்தை பார்த்த டாக்டர்கள் ஆச்சிரியமுடன் அந்த பெண்ணின் தயிரியத்தை பாராட்டினார்கள்.