சவாலாக சொல்கிறேன் ..? நான் தனிநாடு அமைத்தே தீருவேன் .!! நித்தியின் தெனாவட்டு பேச்சு.!! 40 லட்சம் பேர் ஆதரவு ..

பல்வேறு சர்ச்சைகள் இருக்கும் பட்சத்தில் நித்யானந்தா நான் தனி நாடு அமைத்தே தீருவேன் என்று உறுதியாக கூறினார். அவரை கைது செய்ய போலீசின் தரப்பில் எவ்வளவோ நடவடிக்கை எடுத்தும் அவரை கைது செய்ய முடியவில்லை அவர் இருக்கும் இடமும் சரியாக தெரியவில்லை . அவர் தினமும் சரியாக ஒரு வீடியோவை வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்.

ஆனால் அதில் அவர் பல அளப்பறைகளை செய்துவருகிறார். தற்பொழுது அவர் வெளியிட்டு உள்ள வீடியோ ஒன்றில் அவர் 2003 இல் இருந்தே என்மீது பல விஷயங்களிலும் குற்றச்சாற்று வந்து கொண்டு தான் இருக்கிறது அதை எல்லாம் நான் உடைத்து விட்டான் . இனிமேலும் என்மீது குற்றம் சாத்துகிறவர்கள் அவர்கள் வேலையை செய்து ஜாலியாக இருக்கட்டும் நானும் ஜாலியாக இருக்கிறேன்.

நாட்டில் எங்கேயாவது பிரச்சனை இருந்தால் அந்த பிரச்சனையை சில நாட்கள் விவரித்துவிட்டு அந்த பிரச்சனை முடித்துவிட்ட பிறகு வேறு விஷயம் இல்லாததால் என்னிடம் வருவார்கள். பிறகு வேறு ஒரு பரபரப்பு விஷயம் வந்ததும் அதனிடம் செல்வார்கள். பிறகு என்னிடம் வருவார்கள் என்னை பார்த்தால் இவர்களுக்கு இவன் எவ்வளவு அடித்தாலும் தங்கராண்ட என்று நினைத்து விட்டார்கள் .

நான் தனிநாடு ஒன்று அமைத்தே தீருவேன் எனக்கு இந்த ஸ்ரீகைலாச குடியுரிமை நாடு அமைக்க கூறி நாடு முழுவதிலும் இருந்து 40 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.