தளபதி விஜயின் மெழுகு சிலை போன்று நடிகை காஜல் அகர்வாலின் மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது …!!அதுவும் எந்த நாட்டில் தெரியுமா ..??

தளபதி விஜய்க்கு எப்படி கன்னியாகுமாரியில் மெழுகு சிலை திறந்து வைத்தார்களோ .அதுபோல் நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை திறக்கப்பட உள்ளது அதுவும் சிங்கப்பூரில் . சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகு சிலை உருவாகி வருகிறது .அந்த சிலை பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.

இந்த தகவலை நடிகை காஜல் அகர்வாலே தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழிச்சியுடன் தெரிவித்து உள்ளார். அந்த மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் பிரபல தலைவர்கள், பிரபல சினிமா நடிகர்கள் என பலபேரின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன .

அந்தவகையில் இந்தியாவில் இருந்து முதல் முறையாக மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் நடிகையாக எனக்கு பெருமையாகவும் மிகவும் மகிழிச்சியாகவும் இருக்கிறது என்று பதிவு செய்து உள்ளார் காஜல் அகர்வால் . இதனால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.