இரண்டுவாரத்துக்குள் எப்படி கர்பம் .!! இந்த குழந்தைக்கு அப்பா நான் இல்லை ..?? இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை ..

தமிழ்நாடு,தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கட்டேறிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மற்றும் தேன்மொழி . இவர்களுக்கு பெற்றோர்கள் பார்த்து திருமணம் செய்துவைத்தார். பிப்ரவரி 15 ஆம் தேதி . அடுத்த 15 நாளில் அத்தாவது மார்ச் 1 ஆம் தேதி கணவர் முருகன் இந்தோனேசியாவில் உள்ள பேக்ஸ் ஓசேன் என்ற நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்காக சென்றுவிட்டார். கணவர் வெளிநாடு சென்றதால் மனைவி தேன்மொழி தனது அம்மாவீட்டில் தங்கியுள்ளாள் .அவர் மார்ச் 8 ஆம் தேதி கர்பம் என்று மருத்துவர்கள் கூறி உள்ளார்.

இந்த விஷயத்தை கேட்ட முருகனின் தயார் என்மகனுடன் அவள் இரண்டு வாரம் மட்டுமே குடும்பம் நடத்தி உள்ளாள். அதனால் இவள் ஒரு நடத்தை சரி இல்லாதவள் .அதனால் இவளை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டால் மாமியார். அதனால் மனவுளைச்சலுடன் தேன்மொழி கோவையில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்கி உள்ளாள். கடந்த நவம்பர் 6-ம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த தகவலை சொல்லியும் அவர்கள் வரவில்லை. மேலும் வெளிநாட்டில் இருக்கும் கணவரும் அவள் மீது சந்தேகப்பட்டு அவளிடம் போனில் கூட பேசுவதில்லை .

மேலும் குழந்தை பிறந்து இன்றுடன் 40 நாட்கள் ஆகிய நிலையில் குழந்தையுடன் தேன்மொழி மாமியார் வீட்டிற்கு வந்தால். ஆனால் அவர்கள் வெளிய துரத்தி விட்டார்கள். அதனால் சோகத்தில் தேன்மொழி கணவர் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த போலீசாரிடம் தேன்மொழி நடந்ததை சொல்லி எண்குழந்தைக்கு DNA டெஸ்ட் எடுத்தால் உண்மை என்மாமியருக்கும் கணவருக்கும் புரியும் என்று மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தால்.