அரசுபள்ளி இளம்ஆசிரியை செய்த சம்பவம் ..?? இரவுமுழுவதும் கல்லூரியில் இருந்த காரணம்..!! காலையில் பார்த்த அதிர்ச்சி ..

சென்னை , திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஹரி சாந்தி (32 ) வயதாகும் இவருக்கு தந்தை கிடையாது தாயும் ,தங்கையும் தான் உள்ளனர். இவர் 5 ஆண்டுகளாக சென்னை கலை, அறிவியல் கல்லூரியில், தெலுங்கு பிரிவில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வந்தார். பிறகு அரசு ஆசிரியர் தேர்விற்கான தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். ஹரி சாந்தி பள்ளியில் வேலை செய்தாலும் தான் முன்பு வேலை செய்த கல்லூரிக்கு அடிக்கடி சென்று சக ஆசிரியர்களை பார்த்துவிட்டு வருவதுண்டு.

அதுபோல் நேற்றும் சென்று வெகுநேரம் பேசி இருக்கிறார் கல்லூரி முடிந்து அனைவரும் சென்ற பிறகும் அங்கேயே இருந்து இருக்கிறார் .பின்னர் தான் வகுப்பு எடுத்த வகுப்பறைக்கு சென்று உள்ளார். அதன் பின்னர் இன்று காலையில் வகுப்பு அறைகளை சுத்தம் செய்யும் பொழுது ஹரி சாந்தி அந்த வகுப்பறையிலேயே தனது துப்பட்டாவை கொண்டு தூக்கிட்டு கொண்டார். அதுமட்டும் இல்லாமல் அவரது வலது கையில் கத்தியால் கிழித்து ரத்தம் வழித்து வகுப்பறை முழுவதும் ரத்தம் வழித்து இருக்கிறது . இதனை பார்த்தவர்கள் அச்சப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். போலீசார் விரைந்து வந்து சடலத்தை மீட்டனர்.

மேலும் ஹரிசாந்தியின் கைப்பை மற்றும் போன் அந்த இடத்தில் ஆதாரமாக கிடைத்துள்ளது . அதனை கொண்டு கல்லூரி ஆசிரியர்கள் இடமும் மற்றும் குடும்பத்தினர் இடமும் விசாரணை துவங்கி உள்ளது. இதனால் போலீசார்கள் தற்கொலை தடுப்பு எண் 104 மற்றும் ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044 – 24640050 என்ற எண்களை வெளியிட்டுள்ளது. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம். தற்கொலைக்கு யாரும் முயற்சிக்காதீர்கள் என்று ஆலோசனை கொடுத்வுள்ளனர்.