‘2019 ஆம் ஆண்டிற்கான இந்திய அளவில்’..! டாப் சினிமா பிரபலங்கள்.. தற்போது வெளிவந்துள்ள “அதிகாரப்பூர்வ பட்டியல்” இதோ..!

ஆண்டு தோறும் சிறந்த பிரபலங்கள் என்ற அடிப்படியில் ஆய்வு செய்து அதற்க்கான பட்டியலை டிசம்பர் மாதம் மூன்றாவது வாரம் வெளியிடுவது பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை வழக்கம் அந்த அடிப்படையில் இந்த வருடத்தின் சிறந்த பிரபலங்கள் யார் என்பதை பார்ப்போம்.

பொதுவாக பிரபலங்கள் என்றால் சினிமா இல்லாமல் அதை தாண்டி விளையாட்டு ,தொழிலதிபர் , சமூகசேவகர் , அரசியல் போன்ற துறைகளை சேர்த்து ஆய்வு செய்ததில் 2019 இந்தியாவில் முதலிடத்தில் இருப்பது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி.

அடுத்த தமிழ் நாட்டின் சினிமா பிரபலங்கள் இந்திய அளவில் பிடித்துள்ள இடம் என்ன எனபதை பார்ப்போம்..

ரஜினிகாந்த் – 13வது இடம், ஏ.ஆர்.ரஹ்மான் – 16வது இடம், தளபதி விஜய் – 47வது இடம், தல அஜித் – 52வது இடம், இயக்குனர் ஷங்கர் – 55வது இடம், கமல்ஹாசன் – 56வது இடம், தனுஷ் – 64வது இடம், இயக்குனர் சிவா – 80வது இடம், இயக்குனர் கார்த்தி சுப்பராஜ் – 84வது இடம்