குடியிருக்க ஆள் தேடும் கோடீஸ்வரர் ..?? சொகுசு தீவு .. குடியிருப்பு இலவசம் .. வாழ்வில் மாறுதல் வேண்டும் என்று நினைப்பவர்கள் செல்லுங்கள் ..

ஜெர்மனியில் கோடீஸ்வரனாக இருப்பவர்களும் ஒருவர் Karl ரெய்ப்பேன் இவர் தான் வாழ்வில் தனித்து வாழ்ந்து வருகிறார் .அவர் 2000 ஆம் ஆண்டு நியூஸிலாந்து வருகை தந்தார். அப்பொழுது அங்கு இருக்கும் இயற்கை சூழ்நிலை அவருக்கு மிகவும் பிடித்து விட்டது . அதனால் அவர் அங்கு ஒரு எஸ்டேட்டையும் ஒரு தனி தீவையும் தனக்கு சொந்தமாக வாங்கி அந்த தீவில் உலகில் உள்ள அணைத்து வசதிகளும் இருக்கும் படி அதனை அமைத்தார் .

 

மேலும் அதில் கடந்த 2000 ஆண்டுகளில் இருந்து வாழ்த்து வருகிறார் தனித்தே . அவருடை தனிமை உணர்வு தற்பொழுது தான் அவருக்கு கடினமாக தோன்றியுள்ளது. அதனால் அவர் அந்த நியூஸிலாந்தில் இருக்கும் எஸ்டேட்டையும் தீவையும் விற்பனை செய்துவிட்டு பின்பு நான் ஜெர்மனிக்கே போய்விடலாம் என்று நினைத்து கடந்த 2016 ஆம் ஆண்டு 8 .5 மில்லியன் டாலருக்கு விற்க ஏலத்திற்கு முடிவு செய்தார். ஆனால் யாரும் வாங்க முன்வரவில்லை .

மேலும் அங்கு இருக்கும் எஸ்டேட்டை தொண்டு நிறுவனங்களுக்கு கையளிப்பதாக கூறினார் என்றும் குறிப்பிடதக்கது. இந்த தனித்து வாழ்ந்த பயணத்தை மாற்றி அமைக்க அவர் ஒரு செய்தி வெளியிட்டுவுள்ளார் அதில் என்னுடன் மேலும் 10 பேர் இந்த தீவில் வந்து வாழலாம் குடியுரிமை இலவசம் என்று அறிக்கை விடுத்துள்ளார். மேலும் இங்கோ 26 தொழுவங்களும் பல குடியிருப்புகளும் உள்ளது அதுமட்டும் இல்லாமல் தன்னுடைய வாழ்வில் மாற்றம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இங்கு வரலாம் அனைத்தும் இலவசம் தான் என்றும் உங்களிடம் குதிரை இருந்தால் அதனையும் உடன் அழைத்து வரலாம் என்றும் ஊக்கப்படுத்தி உள்ளார்.