ஒருதலை காதலுக்காக எச்சரிக்கை செய்த இளைஞ்சர் ..? நடுவில் மாட்டிக்கொண்ட பரிதாபம்.. ஆசிட் , கத்தி வைத்து இளம்பெண்ணிடம் மிரட்டியதில்..

ஒருதலை காதலால் படுகொலை செய்ய பட்ட இளைஞ்சன் .. கரூர் மாவட்டத்தில் வ.வு.சி. தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் இவரின் மகன் மணிகண்டன் 19 வயது இவர் அந்த ஊரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி .எஸ்.சி. 2 ஆம் ஆண்டு படித்து வருகிறார் . அதே கரூர் பகுதியை ஜீவா நகரை சேர்ந்தவர் தினேஷ் 19 வயது ஆகிறது. இருவரும் நெருங்கிய நண்பர்கள் . அதே ஊரை சேர்ந்தவர் தான் காளிதாஸ் இவருக்கும் 19 வயது ஆகிறது . காளிதாஸ் தினேஷின் தங்கையை சில மாதங்களாக காதலித்து வருகிறார் ஒருதலையாக .

அவர் தினேஷின் தங்கையை தன்னை காதலிக்க சொல்லி தொந்தரவு செய்து உள்ளார் .அதற்கு அவள் மறுப்பு தெரிவித்ததால் அவளிடம் நீ என்னை காதலிக்க வில்லை என்றால் நான் உன்முகத்தில் ஆசிட் ஊற்றி உன்னை நாசம் செய்துவிடுவேன் என்று மிரட்டி இருந்தான் காளிதாஸ் . இதற்கு பயந்துபோன அவள் தான் அண்ணன் தினேஷிடம் இதனை கூறியுள்ளாள் . தினேஷ் இந்த விஷயத்தை மணிகண்டனிடம் சொல்லவும் இருவரும் மேலும் பல நண்பர்களை அழைத்து கொண்டு காளிதாஸ் இருக்கும் இடம் சென்றனர்.

அப்பொழுது காளிதாஸ் மது மற்றும் கஞ்சா அடித்து கொண்டு அவன் மேலும் பல நண்பர்களுடன் போதையில் இருந்தான். அப்பொழுது இவர்கள் அவனிடம் சென்று அவளை விட்டுவிடு மீண்டும் அவளை காதலிக்க சொல்லி தொந்தரவு செய்யாதே என்று அறிவுரை சொல்லிக்கொண்டு இருந்தனர். அதனால் கோபப்பட காளிதாஸ் அவர்களிடம் போய் விடுங்கள் இல்லை என்றால் கொலை செய்து விடுவேன் என்று சொல்லி தான் வைத்து கொண்டு இருந்த கத்தியை எடுத்து வீசி மிரட்டினான்.

இதனை பொருட்படுத்தாமல் மணிகண்டன் மீண்டும் அறிவுரை சொல்லி கொண்டு இருந்ததால் காளிதாஸ் மற்றும் மற்ற நண்பர்கள் அவர்களை கத்தியை வைத்து குத்த அரமித்தனர் சண்டை முற்றியதால் மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர். ஆனால் மணிகண்டன் மட்டும் நடுவில் தனியே சிக்கி கொண்டான் அவனை காளிதாஸ் மற்றும் மற்றவர்கள் சரமாரியாக வெட்ட செய்தனர் .

அதே இடத்தில் உயிருக்கு போராடினான் மணிகண்டன் பிறகு காளிதாஸ் தப்பி ஓடிவிட்டான் மணிகண்டனை அதன் பிறகு மற்ற நண்பர்கள் வந்து பார்த்து மருத்துவ மனையில் அனுமதித்தனர் .ஆனால் அவன் சிகிச்சை பலன்யின்றி உயிர் இழந்தார். மேலும் தகவல் அறிந்து போலீசார் அவர்களை கைதுசெய்து உள்ளார்கள் .