பிரியங்கா கொலை வழக்கில் கொல்லப்பட்ட 4 பேரின் சடலங்கள் ..?? உறவினர்களின் போராட்டத்திற்கு பின்பு கோர்ட் எடுத்த முடிவு ..??

ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவர் பிரியங்கா ரெட்டி வன்புணர்வு செய்து எரித்து கொன்ற வழக்கில் கைதான நான்கு பேரையும் என் கவுண்டரில் சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் பிரேத பரிசோதனை செய்த பின்னரும் சடலங்கள் மஸ்டெரியில் வைக்கப்பட்டு உள்ளது . மேலும் சடலங்களை போலீஸாரே அடக்கம் செய்து விடுவதாகவும் , நால்வரின் உறவினர்களிடம் தரப்போவது இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது .இந்த நிலையில் நால்வரின் உறவினர்கள் எங்களிடம் சடலத்தை கொடுத்து விடும்படி கதறுகிறார்கள் .

மேலும் முகமது பாஷா, நவீன், ஷிவா, சின்னகேசவலு ஆகிய நால்வரும் கடந்த 6ஆம் தேதி போலீசார்களால் என் கவுண்டர் செய்ய பட்ட நிலையில் அவர்களின் சடலத்தை எதற்காக இவ்வளவு நாட்கள் அடக்கம் செய்யாமல் வைத்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது . மேலும் சின்னகேசவலுவின் மனைவி கர்பிணி ஆவள் அவள் தனது கணவரின் சடலத்தை என்னிடம் கொடுத்து விடுங்கள் என்று கேட்டு நடுரோட்டில் போராட்டம் நடாத்தியுள்ளார்.

இவர்களின் கோரிக்கையில் நீதிமன்றம் மேல் பரிசோதனை செய்து சடலத்தை பெற்றோர்களிடம் கொடுக்கும்படி உத்தரவு இட்டுவுள்ளது. அதனால் அவர்களின் சடலம் இரண்டாம் முறையாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அந்த காட்சிகள் வீடியோ ஆதாரமாக சேகரிக்க பட்டது மேலும் அவர்களின் சடலம் உறவினர்கள் கையில் ஒப்படைக்க போவதாக தெரிவிக்கபட்டது.